சந்ததிகளை செதுக்குவோம்
சந்ததிகளை செதுக்குவோம்
***********************
பெற்றெடுத்த பிள்ளைகள் மீது
எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை அடிக்கடி பிள்ளைகள் புரியும் விதம் வாழ்வில் வெளிப்படுத்தி கொண்டே இருந்தால்
அந்தளவுக்கு பிள்ளைகள் பெற்றோர்களின் எதிர்பார்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனிமையில் கருதுவார்கள்
பிள்ளைகள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தி விசாரிக்கவும் கூடாது
பிள்ளைகள் குற்றமே செய்யமாட்டார்கள் என்று குருட்டு நம்பிக்கை வைத்து அவர்கள் வழிகேடுகளில் தொடர காரணமாகவும் இருக்க கூடாது
தவறுகளை செய்யாதே என்று அதிகார தோரணையில் உபதேசம் செய்வதை விட தவறு செய்யும் சூழ்நிலையில் சிக்கி விடாதே என்ற அறிவுரையை ஆழமாக பதிவு செய்யுங்கள்
காரணம் சூழ்நிலைகளால்
பல தவறுகளில் சிக்கி தவிக்கும் மனிதர்களே அதிகம்
பிறரை எதிர்பார்த்து செய்யும் தொழிலை எப்போதும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்காதீர்கள்
யாருடைய துணையும் ஆணிவேராக இல்லாத நிலையிலும் சுயமாக சம்பாத்தியம் செய்யும் திறனை கற்று கொடுங்கள்
சந்ததிகளை ஒடுக்கி நடத்துவதில் இல்லை திறமை
சந்ததிகளை செதுக்கி நடத்துவதே
பெற்றோரின் கடமை
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment