வாலிபனே உனக்கான அறிவுரை

        வாலிபனுக்கு ஓர் அறிவுரை
                   ****************
வாலிபத்தில் ஒரு மனிதன் 
எதை தேர்வு செய்கிறானோ 
அதை நோக்கியே அவனது வாழ்கை பயணம் அமையும் என்பதை இளைஞர்கள் உள்வாங்க வேண்டும் 

வாழ்வில் சில தேர்வுகளை எளிதாக மாற்றி கொள்ள இயலும்
சில தேர்வுகளை மாற்றி கொள்ள 
ஆசை பட்டாலும் நடைமுறையில் கொண்டு வர பல சிக்கல்களை 
தர்ம சங்கடங்களை எதிர் கொள்ளும் சூழ்நிலை நிச்சயம்  ஏற்படும்

சில மாற்றங்களை உருவாக்குவது கானல் நீராகவே மாறி விடும்

அதில் ஒன்றே மணவாழ்வு 

யாரை திருமணம் செய்வது
எப்போது திருமணம் செய்வது
எந்த இடத்தில் திருமணம் செய்வது
எந்த குடும்பத்தில் திருமணம் செய்வது
எந்த நோக்கத்திற்கு திருமணம் செய்வது

என்பது அவைகளில் மூலமான ஒன்று 

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற வாசகம் இதற்கே சரியாக பொருந்தும் 

திருமணம் செய்த பின் இதை சீர் செய்து கொள்ளலாம் 
திருமணம் செய்த பின் அதை சீர் செய்து கொள்ளலாம் 
என்று கருதி இல்லறத்தில் நுழையும் வாலிபன் 
அவனது கற்பனைகளுடன் அதிகமாக சண்டையிட நேரிடும் 
நிஜ வாழ்வில் தோல்விகளே 
தொடர் கதையாகி விடும்
உலவியல் நோய்களே சேகரிப்பாக 
மாறி விடும் 

வாலிப முறுக்கமும் வேகமும்
சிந்தனையை அறிவுரைகளை 
பூட்டி வைத்து விடும் 

அனுபவ பாடத்தில் உண்மை வெளிப்படும் 
ஆனால் ஆனந்தம் அந்நேரம்
அடிபட்டு விடும் 

இதை கவனத்தில் கொள்வீர் 

உலகில் எதுவும் அதிசயம் இல்லை
அதிசயம் போன்ற மன பிரம்மையே எதார்த்த உண்மை 

எதை மாற்ற 
நீ சிரமப்படுகிறாயோ
எதற்கு நீ அடிமைபடுகிறாயோ
அதே போன்ற இயல்பு நிலை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கும் என்பதை நீ மறந்து விடாதே 

நிறங்களும் எடைகளும் தான் மாறுபட்டதாக இருக்குமே தவிர
குணநலன்களும் பண்பாடுகளும் 
உன் குடும்பத்தில் நீ காணும் சூழ்நிலையில் தான் புது வரவுகளில் அமைந்திருக்கும் என்பதை சிந்திக்க மறந்து விடாதே 

இது ஆடவனுக்கு மட்டும் உரித்தான அறிவுரை அல்ல
பெண்ணுக்கும் பொருத்தமான அறிவுரையே  


* قال يحيى بن معاذ رحمه الله: أخوك من ذكرك العيوب, وصديقك من حذرك الذنوب

தவறுகளை நினைவூட்டுபவன் 
உன் சகோதரன்
பாவங்களை எச்சரிக்கை செய்பவன் உனது நண்பன் 

கருத்துரை  --- யஹ்யா இப்னு முஆத் 


    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி 







Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்