பத்ரு போர் புரளிகள்

                 பத்ரு போர் புரளிகள் 
                      *************
                  கட்டுரை எண் 1155
                       ***********
இஸ்லாமிய எதிரிகளை பழி தீர்க்கவும் பத்ரு போர் நடைபெறவில்லை 

இஸ்லாத்தை பரப்பவும் 
பத்ரு போர் நடைபெறவில்லை

இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கும் பத்ரு போர் நடைபெறவில்லை 

இம்மூன்று  காரணங்களுக்காகவும்  யுத்தம் செய்யுங்கள் என்றும் திருக்குர்ஆன் போதிக்கவில்லை 

இதை உணராது பத்ருபோர் பற்றிய  செய்திகளில் மேற்கூறப்பட்ட  காரணத்தையே மையமாக வைத்து 
சில முஸ்லிம்கள் செய்திகளை பரப்புவதை  காண முடிகிறது

மார்க்க ஞானம் இல்லாத நிலையில் மார்க்க அறிஞர்களை போல் தன்னை கருதி கொண்டு மார்க்க விசயங்களை தவறாக பரப்பும் போக்கு தற்போது சமூகவலைதளத்தில் அதிகரித்துள்ளது 



மக்கா வாழ்கையில்  சோதனைகளை  அனுபவித்து பொறுமையாக இருந்த நிலையிலும்  அப்பகுதியில்  இருந்த இஸ்லாமிய எதிரிகள் நபித்தோழர்களையும் நபிகளாரையும் மக்காவை விட்டே துரத்துகின்றனர்

இந்நிலையில் வேறு வழியில்லாது மக்காவை நோக்கி பயணம் செய்து அமைதியான வாழ்க்கையை அகதிகளாக மக்காவில் கழித்து கொண்டிருந்தனர்

மக்காவில் இருந்து நபிகளாரையும் அவர்களின் தோழர்களையும் மதீனாவிற்கு விரட்டிய கூட்டமே மறுபடியும் மதீனாவை நோக்கி வரம்புமீறி  படையெடுத்து வந்ததின் விளைவாக தங்களையும் அப்பாவி மக்களையும்  தற்காத்து கொள்ள பத்ரு என்ற இடத்தில்  நடைபெற்ற போர் தான் 
பத்ரு போர்  

தற்காப்பு நடவடிக்கையை உலகமே சரி என்று ஒப்பு கொண்ட சூழ்நிலையை மூடி மறைத்து விட்டு 
பத்ரு போரை இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்துவதற்கு நடத்தினார்கள் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க நடத்தினார்கள் என்று அபாண்டமாக செய்திகளை பரப்புவது  பாவமான காரியமாகும் 

இந்த உண்மையை முஸ்லிம்கள் முதலில் உணர வேண்டும் 

ஒரு அவதூறை மாற்றார்கள் பரப்பினால்  தவறு என்றும் 
அதே அவதூறை  முஸ்லிம்கள் பரப்பினால் மார்க்க பிரச்சாரம் என்றும் கருதுவது அறிவீனமாகும் 


وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ   فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

பத்ரு போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்

ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்

             (அல்குர்ஆன் : 3:123)



    நட்புடன் J . யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்