முடமாகி வரும் மார்க்க கல்வி
முடமாகி வரும் மார்க்க கல்வி
********************
கட்டுரை எண் 1154
************
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக உலக கல்வியை போதிப்பதற்க்கு ஒதுக்கும் நேரத்தில் கால் பகுதியை கூட இஸ்லாமிய மார்க்க கல்வியை போதிப்பதற்கு ஒதுக்க முயற்சிப்பது இல்லை என்பது தான் பிள்ளைகள் வழிகேடுகளில் சிக்கி தவிப்பதற்கான மூல காரணம்
உலக கல்வியை அடைவதற்கு நேரத்தை ஒதுக்குவார்கள்
மார்க்க கல்வியை பெறுவதற்கு
நேரம் கிடைத்தால் அனுப்புவார்கள்
என்ற வேறுபாடை சமூகத்தை உற்று நோக்குபவர்களுக்கு தெளிவாக புரிய முடியும்
வளரும் பருவத்தில் உலக கல்வி யாவும்
ஒரு மனிதனின் உலகியல் நோக்கத்திற்காக மட்டுமே பயிற்றுவிக்கப்படும்
மருத்துவதுறை மதிப்பற்றதாக வருமானம் குறைந்ததாக இருந்தால் மருத்துவ படிப்புக்கும் வரிசையில் ஆள் நிற்காது
IAS IPS போன்ற துறை அரசாங்க பின்னனி இல்லாது இருந்தால் அவைகளுக்கு வரிசையில் ஆள் நிற்காது
இதை விபரித்து சொல்வதற்கு
ஏதும் இல்லை
அதன் காரணமாக தான் கல்விக்கு கட்டணங்களையும் லஞ்சங்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்
அதை அடைப்பதற்கு தன்னால் இயன்ற அளவு மனிதனும் முயற்சிக்கிறான்
மார்க்க கல்வி யாவும் உலகில்
ஒரு மனிதன் தன்னை சீர்படுத்தி கொள்ளவும் மறுமையில் இறையன்பை பெறவும் போதிக்கப்படும்
சில வேளை மார்க்க கல்வியும் அரசாங்க பின்னனியுடன் அதிக வருமானத்தை தரும் துறையாக இருந்தால் இவ்வாறு விபரித்து சொல்லும் நிலையே ஏற்பட்டிருக்காது
மார்க்கத்தை மூலதனமாக வைத்து உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கவோ
உலகத்தை மூலதனமாக வைத்து மார்க்கத்தை முற்றிலும் புறக்கணிக்கவோ இஸ்லாம் கல்வியை பற்றி பேசுவது இல்லை
அதிகாலை எழுந்தவுடன் சிறிது நேரம் திருமறையின் அரபு மூலத்தை படிக்க அனுப்புவது தான் மார்க்க கல்வி என்ற குறுகிய வட்டத்தையே முஸ்லிம்கள் நெடுங்காலமாக வைத்துள்ளனர்
பள்ளிவாசல்களில் அதிகாலை ஏற்பாடு செய்யப்படும் மக்தப் மதரசாவில் ஒரு மணிநேரத்தில் ஐம்பது சிறார்களுக்கு எந்த முறையில் மார்க்க கல்வி தரமாக போதிக்கப்படும் என்பதை சிந்தித்தாலே உணர முடியும்
இஸ்லாமிய போதனைகளை பெற்றோர்கள் சொல்லி தரும் அளவு வேறு எங்கும் சொல்லி தர முடியாது என்பதை உணர வேண்டும்
சுருக்கமாக சொன்னால்
பெற்றோர்களுக்கு தான் தற்போது மார்க்க கல்வி மிகவும் அவசியமானது
மார்க்கம் அறியாத பெற்றோர்களுக்கு
மார்க்கத்தை பேசாத பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக பிறந்தவர்கள்
எதிர் காலத்தில் சிறந்த தலைமுறையாக வருவார்கள் என்பதே சந்தேகம் தான்
ஒவ்வொரு துறைக்கும் எந்தளவு நேரத்தை ஒதுக்க வேண்டுமோ அந்தளவு நேரத்தை ஒதுக்குங்கள்
அதுவே போதுமானது
சுருக்கமாக சொன்னால்
பிள்ளைகள் நடந்து செல்லும் பாதை எதை நோக்கியது என்று சிந்தித்து
அந்த பாதையில் அவர்கள் சீராக செல்ல இஸ்லாம் எனும் வழிகாட்டு திசை கருவிகளை அமைப்போம்
முதுகெழும்பாக திகழ வேண்டிய மார்க்க கல்வி முடமாகி வருவது தான் எதார்த்தமான உண்மை
وَالْعَصْرِۙ
காலத்தின் மீது சத்தியமாக
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 103:1, 2)
நட்புடன் J . யாஸீன் ( இம்தாதி )
Comments
Post a Comment