2023 ரமழான்
2023 ரமழான் பாடம் ஒன்று
***************
பள்ளிவாசல்களை நிரப்புவதற்கு பெயர்
அல்ல ரமழான் !!
ஈமானை இதயத்தில்
நிலைக்க வைப்பதற்கு பெயரே
ரமழான்
ரமழான் மாதத்தை வழமை போல்
இவ்வருடமும் கழித்து விடுவோம் என்று
நீ முடிவு செய்தால்
ரமழானுக்கு நீ தயாராகி
பயன் இல்லை
இறைவனை பற்றிய சரியான
புரிதலுக்கு தான்
உன்னை நீ முதலில்
தயார் படுத்த வேண்டும்
ரமழான்
ஈமான்தாரிகளின் மாதமே தவிர
வேடதாரிகளின் மாதம் அல்ல
ரமழான்
பாவங்களை போக்கும்
மாதம் தானே தவிர
பாவங்களுக்கு விடுமுறை விடும்
மாதம் அல்ல
இதர மாதங்களில்
எப்படியும் நடப்பேன்
ரமழான் மாதத்தில் மட்டும்
இப்படியே நடப்பேன்
என்று நீ முடிவு செய்தால்
நீ ரமழானை கண்ணியம் செய்யவில்லை
மாறாக ரமழானின் கண்ணியத்தையே
நீ புரியவில்லை
என்பதே உண்மை
கங்கையில் புனித நீராடுவதும்
ரமழானில் பள்ளிகளை நிறைப்பதும்
சமம் அல்ல
இறையில்லங்கள்
அனுதின தொழுகைகளுக்கு உரியது
ரமழான் மாதத்திற்கு மட்டும்
உரியது அல்ல
அடி எடுத்து வைக்கும் போதே
உள்ளத்தை உறுதி படுத்து
இவ்வருட ரமழான்
உன் வாழ்வை நெறிபடுத்தும்
இன்ஷா அல்லாஹ் !!
وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ
மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் இருக்கிறான்
அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்
அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்
இவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்
இதுதான் தெளிவான நஷ்டமாகும்
(அல்குர்ஆன் : 22:11)
நட்புடன் J . யாஸீன் ( இம்தாதி )
Comments
Post a Comment