மருந்து மாத்திரைகள் வாழ்வின் தத்துவம்

                வாழ்கை தத்துவம் 
           மருத்து மாத்திரைகள் 
                ******************

வசதி இருக்கின்றது என்பதற்காக 

யாரும் தடுக்க முன்வர மாட்டார்கள்
என்பதற்காக

யாருக்கும் தெரியாது என்பதற்காக

அத்தியாவசிய தேவையின்றி 
எவரும் மருந்து மாத்திரைகளை விரும்பி  வாங்கி உட்கொள்வது இல்லை 

மருந்து மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனத்திற்கு அதிபதி என்பதற்காகவும் 
மெடிக்கல் ஸ்டோருக்கு சொந்தமானவன் என்பதற்காகவும்  நினைத்த நேரம் எடுத்து உண்ண விரும்புவதும்  இல்லை 

காரணம்  மருந்து மாத்திரைகள் சொந்தமாக இருந்தாலும் அதன் தேவை தனக்கு ஏற்பட்டுள்ளதா 
அதனால் தனக்கு பயன் ஏற்படுமா என்றே ஒவ்வொரு மனிதனும்  சிந்திப்பான்

இது போன்றதே மனித  வாழ்கை

மனம் ஒன்றை நாடினாலும்
எதை தேடினாலும்
அதன் அவசியம் தனக்கு இருக்கின்றதா என்பதை பல முறை யோசிக்க வேண்டும்

தேவை என்ற நிலையிலும் தேவைக்கு மாத்திரம் எதையும் அடைய முயற்சிக்க வேண்டும் 


மருந்து மாத்திரைகள் மனிதனுக்கு பயன் அளித்தாலும் 
அதை உட்கொள்வதால் ஏற்படும் 
புற விளைவுகளை போல் 
உலக வாழ்வில்  எந்த ஒன்றிலும் பயனும் இருக்கும் விளைவுகளும் இருக்கும்  வினைகளும் இருக்கும் 

விஷ மாத்திரைகளை உட்கொள்வதும் அறிவீனம் 
நோய் நீக்கும் மாத்திரைகளை 
புறம் தள்ளுவதும் அறிவீனம்
பயன் தரும் மாத்திரைகளை 
அதிகம் உட்கொள்வதும் அறிவீனம் 

இதுவே வாழ்கை தத்துவம் 



زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏

பெண்கள்  ஆண் மக்கள் பொன்னிலும் வெள்ளியிலுமான பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள் சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது

இவை( நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்

அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு

            (அல்குர்ஆன் : 3:14)


   நட்புடன்  J . யாஸீன் (இம்தாதி) 


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்