பிச்சைக்காரர்கள்

      உழைப்பை ஏளனமாக கருதும்
               பிச்சைக்காரர்களை
                 ஊக்கப்படுத்தாதீர்
              ••••••••••••••••••••••
             J . யாஸீன் இம்தாதி
                  ------------------------

பிறரிடம் கையேந்தியே வாழ்வை கடத்தி கொண்டிருக்கும் பிச்சைகாரர்களை உன்னிப்பாக கவனியுங்கள் 

உங்கள் பாக்கெட்களில் கூட
சில பொழுது பணம் இல்லாது இருக்கலாம்
ஆனால் அவர்கள் சட்டியிலும் பழைய பெட்டியிலும் ரூபாய் நோட்டுகள் கட்டுக்களாக சில்லறை பொட்டலங்களாக தேங்கி நிற்க்கும் 

தொழில் செய்யும் பல முதலாளிகளுக்கு சில்லரைகளை வழங்கும் சிறு வங்கிகளாகவே பல பிச்சைக்காரர்கள் உள்ளனர்

ஆனால் அவர்களின் வாழ்கை முறையில் எந்த மாற்றத்தையும் காண முடியாது 

அணிந்துள்ள  உடை அழுக்கு 
படிந்ததாக காணப்படும் 

குளிக்காத நிலையில் துர்வாடையே அவர்களின் அடையாளமாக  வீசும்

அவர்களின் சந்ததிகளும் பிச்சை எடுப்போராகவே வார்க்கப்படுவர்

சுருக்கமாக சொன்னால் 
கால் கடுக்க நடந்து ஊர் ஊராக பிச்சை எடுத்து சேமித்துள்ள அவர்களின் பொருளியலும் அவர்களின் மரணத்திற்கு பின்பே பிறரால் கட்டு கட்டாக  எண்ணி பார்க்கப்படும் 



இதற்கு மூல காரணம் என்ன? 

உழைப்பை புறக்கணித்து விட்டு
இறை நம்பிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு 
வயிற்றை  குப்பை தொட்டியாக கருதியதின் விளைவு தான் இவை 

வறுமைக்கு உதவி பெறலாம்
தேவைக்கு கடன் பெறலாம் 
ஆனால் வாழ்கையை நடத்துவதற்கு பிச்சை எடுப்பதை தொழிலாக கருத கூடாது 

அதுவே இறைவனின் கோபமாகவும் சாபமாகவும் மாற்றப்பட்டு விடும் 

இதனால் தான் தர்மத்தை வலியுருத்தும் இஸ்லாம் பிச்சை எடுப்பதை கீழ்நிலை நன்மையாக கூட குறிப்பிடவில்லை 

வாங்கும்  கரத்தை விட 
கொடுக்கும் கரங்களையே இஸ்லாம் பெறுமையாக பேசுகிறது 

உணவுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் வருவோர்களை விரட்டாதீர்
வழமையாக பிச்சை எடுப்போருக்கு சில்லறைகளை வழங்கி அவர்களின் உழைப்பை குழி தோண்டி புதைத்து விடாதீர்

உழைப்பை ஏளனமாக கருதும் பிச்சைக்காரர்களை ஒதுக்குவது பாவமான காரியம் அல்ல
அது போன்றோரை அரவணைப்பது சமூகத்தை நாசமாக்கும் காரியம் 

                  !!  நபிமொழி  !!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக

உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி 
தம் முதுகில் சுமந்து (விற்று)சம்பாதிப்பது

ஒருவனிடம் கையேந்துவதை விட சிறந்ததாகும்
அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்
மறுக்கவும் செய்யலாம்

                    (புஹாரி-1470)  

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்