சமுதாய தலைவர்கள் கவனத்திற்கு

    இயக்கங்கள் அமைப்புகளுக்கு      
          அன்பான வேண்டுகோள் 
                   *****************

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின்  முன்னேற்றத்தை வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் அமைப்புகள் ஏராளம் 

இயக்கங்களும் அமைப்புகளும் முஸ்லிம் சமூகத்திற்கு பல சேவைகளை செய்துள்ளதையும் நேர்மையாக சிந்திப்போர் மறுக்க இயலாது 

ஆனால் எந்த துறை முஸ்லிம் சமூகத்தையும் 
பிற சமூகத்துடன் தகுதியில் சமநிலை படுத்துமோ 
அந்த கல்விதுறையில் முஸ்லிம் சமூகத்தை உயர்த்தி செல்வதற்கு இஸ்லாமிய அரசியல்  இயக்கங்களும் சமூக அமைப்புகளும் இதுவரை செய்துள்ள சாதனை என்ன?
அதற்கான திட்டங்கள் என்ன? 

சுதந்திர இந்தியாவில் இஸ்லாமிய அரசியல் அமைப்புகளும் சமுதாய அமைப்புகளும் சொந்த முயற்சியில் உருவாக்கிய 
கல்லூரிகள் எத்தனை ?
பள்ளி கூடங்கள் எத்தனை  ?

மாநாடு
பொதுகூட்டம்
கருத்தரங்கு 
இயற்கை பேரிடர்  உதவி தொகை 
போன்றவைகளுக்கு முஸ்லிம்  சமூகத்தை நாடும் போது பொருளாதார உதவிகளை 
வாரி இரைக்கும் 
முஸ்லிம்  சமுதாயம் 
முஸ்லிம் சமூகத்தை கல்வியில் முன்னேற்றம் அடைய செய்யும் கல்லூரிகளை பள்ளிகூடங்களை உருவாக்கிட  பொருளுதவி செய்ய மாட்டோம் என்று  சொன்னார்களா  ?



சமூகத்தை ஏணியாக மாத்திரம் பயன்படுத்தாதீர்கள் 
சமூகத்திற்கு ஏணியாகவும் நீங்கள் மாறுங்கள் என்று 

அனைத்து அரசியல் இயக்கங்களையும் சமுதாய அமைப்புகளையும் சமுதாய தலைவர்களையும் உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்  




                         இப்படிக்கு 
   இஸ்லாமிய சமூக உறுப்பினரில்
                            ஒருவன்

              J . யாஸீன் ( இம்தாதி )





Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்