ஆடவனின் திருமண வயது
இஸ்லாத்தில் ஆடவனின் திருமண வயது என்ன ?
கேள்வியாளர் அசாருதீன் மதுரை
7-01-2023 நண்பர்கள் குழுமம்
**************
குறிப்பிட்ட வயதை தீர்மானித்து திருமணத்தை இஸ்லாம் நெறிபடுத்தவில்லை
பெண்ணுக்கு சில தகுதிகளும்
ஆடவனுக்கு சில தகுதிகளும் உள்ளன
ஆடவனை பொருத்தவரை
திருமணம் செய்வதற்கு இறைநம்பிக்கைக்கு அடுத்தபடி அடிப்படை தேவை பொருளாதாரம்
காரணம் திருமணம் என்ற பந்தத்திற்குள் ஒரு ஆடவன் நுழைந்தால் பல பாரங்களை சுமக்கும் நிலை அவசியம் ஏற்படும்
மனைவியை தங்க வைப்பதற்கான வீடு அன்றாட செலவுகளுக்கான பொருளீட்டு தொழில் முறை
இவைகளை வாழ்வில் நிலைபடுத்திய பிறகே ஒரு ஆடவன் திருமண பந்தத்தை யோசிக்க வேண்டும்
ஆர்வகோளாரில்
ஆசை கோளாரில்
திருமணம் செய்து விட்டு தனது பாரத்தை பெற்றோர் மீது சுமத்துவது
நம்பி வந்த உறவை சிக்கலில் சிக்க வைப்பது ஆடவனுக்கு வாழ்வில் கடுமையான உளைச்சலை ஏற்படுத்தி விடும்
குறிப்பாக மணவாழ்வில் நுழையும் முன் எதார்த்த வாழ்கை முறையை உள்வாங்கிய பின் நுழைய வேண்டும்
கற்பனை வாழ்வில் அடியெடுத்து வைக்கும் எந்த ஆடவனும் இல்லற வாழ்வில் மகிழ்வை பெற இயலாது
திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்ட பின்
இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
அப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
சொந்த ஊரில் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
பந்தத்தில் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
உடன் படித்தோரை திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
வேலை பார்க்கும் பெண்ணை
மண முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே
என்ற யோசனைகள் யாவும்
கானல் நீராக மாறிவிடும்
வாலிபனாக இருக்கும் நிலையில் எடுக்கும் அதிரடி முடிவுகளை செயல்படுத்தும் சுதந்திரம் இருப்பது போல் மணம் முடித்த பிறகு எடுப்பது சாத்தியம் இல்லை என்பதை ஆடவர்கள் புரிந்து கொள்ளுங்கள்
அழகு இயல்பானது
அலங்காரம் நிலையானது அல்ல
வசதி மதிப்பானது
வசதியே மகிழ்வை உருவாக்குபவை அல்ல
படிப்பு அறிவை சார்ந்தது
பகுத்தறிவு வாழ்வை சார்ந்தது
மார்க்க உணர்வு மறுமையை பாதுகாக்கும்
வாழ்வின் சிக்கலை எதிர் கொள்ளும்
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்
இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள்
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்
இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்
(நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்
ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான் மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்
(அல்குர்ஆன் : 2:221)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment