2023 புத்தாண்டு
2023 புத்தாண்டு படிப்பினை
*****************
J . யாஸீன் இம்தாதி
*********
ஓர் ஆண்டு பிறப்பதால் நடக்க வேண்டிய காரியங்கள் நன்றாக அமையும் என்று கருதுவதே மடமையின் முதல் படி
வருடத்தின் துவக்கமே
மடமை நம்பிக்கையில் தான் அடி எடுத்து வைக்கப்படுகிறது
2022 ஆண்டில் வருமானம் குறைந்தவன் அவ்வருடத்தை துஷ்ட வருடம் என்பான்
2022 ஆண்டில் வருமானம் அதிகரித்தவன் அவ்வருடத்தை
இஷ்ட வருடம் என்பான்
இவ்விருவரில் யாருடைய முடிவை நீங்கள் சரி காண போகிறீர்கள் ?
எந்த ஒன்றை நீங்கள் சரி கண்டாலும் மற்ற ஒருவரின் முடிவை நிச்சயம் நீங்கள் சரி காண முடியாது
அப்படியானால் அவர் கடந்த வந்த ஆண்டு புத்தாண்டா ?
அல்லது இத்துப்போன ஆண்டா ?
மனித வாழ்வில் நலவும் தீங்கும்
புது வருடம் தீர்மானிப்பது இல்லை
மாறாக மனிதனுக்கு இறைவன் நாடியுள்ள விதியே தீர்மானிக்கிறது
புத்தாண்டு பிறப்பதால்
உலகில் எந்த ஒன்றும் மாறுபாடாக நடைபெறுவது இல்லை
அதே காற்று
அதே மழை
அதே வெப்பம்
அதே குளிர்
சூரியன் தன்னை தானே ஒரு முறை சுற்றி முடிப்பதை தான் ஒரு ஆண்டு என்று குறிப்பிடுகிறோம்
அதற்கும்
மனிதனின் வாழ்வு சிறப்பதற்கும் வீழ்வதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை
காலத்தின் மீதும்
நேரத்தின் மீதும்
பழி போடும் அறிவீனத்தில் இருந்து விலகி வாழுங்கள்
உலகமே ஓர் அறிவீனத்தை தூக்கி பிடிக்கிறது என்பதற்காக
நீங்களும் இணைந்து அதே அறிவீனத்தை ஊக்கப்படுத்தாதீர்கள்
2023 புத்தாண்டில்
பிறந்த மனிதனும் இருப்பான்
இறந்த மனிதனும் இருப்பான்
பிறந்தவனுக்கு புத்தாண்டு
இறந்தவனுக்கு செத்த ஆண்டா ?
2023 புத்தாண்டில்
மருத்துவமனையில் நுழைந்தவனும் இருப்பான்
மருத்துவமனையில் இருந்து மீண்டவனும் இருப்பான்
இவ்விருவரில் ஒருவனுக்கு புத்தாண்டு ?
மற்ற ஒருவனுக்கு நோய் ஆண்டா ?
கடுமையான முயற்சியும்
அறிவிப்பூர்வமான அணுகுமுறையும்
இறைவனின் நாட்டமும்
ஒன்றாக அமைந்தால்
எந்த ஒரு காரியமும் சீராக அமையும்
இதை உணராது ஆயிரம் முறை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்று அறிக்கை போடுவதால் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை
فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ
தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போல் அல்லாது அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா?
(அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள் நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக
(அல்குர்ஆன் : 10:102)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment