பிச்சைக்காரர்கள்
உழைப்பை ஏளனமாக கருதும் பிச்சைக்காரர்களை ஊக்கப்படுத்தாதீர் •••••••••••••••••••••• J . யாஸீன் இம்தாதி ------------------------ பிறரிடம் கையேந்தியே வாழ்வை கடத்தி கொண்டிருக்கும் பிச்சைகாரர்களை உன்னிப்பாக கவனியுங்கள் உங்கள் பாக்கெட்களில் கூட சில பொழுது பணம் இல்லாது இருக்கலாம் ஆனால் அவர்கள் சட்டியிலும் பழைய பெட்டியிலும் ரூபாய் நோட்டுகள் கட்டுக்களாக சில்லறை பொட்டலங்களாக தேங்கி நிற்க்கும் தொழில் செய்யும் பல முதலாளிகளுக்கு சில்லரைகளை வழங்கும் சிறு வங்கிகளாகவே பல பிச்சைக்காரர்கள் உள்ளனர் ஆனால் அவர்களின் வாழ்கை முறையில் எந்த மாற்றத்தையும் காண முடியாது அணிந்துள்ள உடை அழுக்கு படிந்ததாக காணப்படும் குளிக்காத நிலையில் துர்வாடையே அவர்களின் அடையாளமாக வீசும் அவர்களின் சந்ததிகளும் பிச்சை எடுப்போராகவே வார்க்கப்படுவர் சுருக்கமாக சொன்னால் கால் கடுக்க நடந்து ஊர் ஊராக பிச்சை எடுத்து சேமித்துள்ள அவர்களின் பொருளியலும் அவர்களின் மரணத்திற்கு பின்பே பிறரால் கட்டு கட்டாக எண்ணி பார்க்கப்படும் இதற்கு மூல காரணம் என்ன? உழைப்பை