புதைக்கும் விதையே முளைக்கும்
புதைக்கும் விதையே முளைக்கும்
******************
J . யாஸீன் ( இம்தாதி)
***************
எதிர் காலம்
தற்போது காணும் உலகின் சீரழிவை விட பல மடங்கு கேவலமாக இருக்கும்
தற்கால சந்ததிகளே
சீரழிவில் சிக்கி சின்னாபின்னமாகி வருவதை கண் முன் காணுகிறோம்
புதைக்கும் விதையே முளைக்கும்
இதை பெற்றோர்கள் உணர வேண்டும்
எந்த பருவத்தில் சந்ததிகளை இறைவன் உங்கள் கட்டளைக்கு இணங்கும் விதம் வடிவமைத்துள்ளானோ
எந்த பருவத்தை சந்ததிகள் பெற்றோரை அஞ்சி நடக்கும் தன்மை உடையவர்களாகவே செதுக்கியுள்ளானோ
அந்த பருவத்தில் சந்ததிகளை
உற்று கவனியுங்கள்
தேவையான போதனைகளை கற்று கொடுங்கள்
கண்டிக்க வேண்டிய விசயங்களை கண்டு கொள்ளாது இருந்து விடாதீர்கள்
சின்ன குழந்தைகள் தானே
வளரும் போது மாறி விடுவார்கள்
என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்து விடாதீர்கள்
அவ்வாறு தர்க்கம் செய்தவர்களே தங்கள் பிள்ளைகளால் கேவலத்தை அதிகம் சந்தித்துள்ளனர்
கண்ணாடி முகத்தின்
அழகை உரியவருக்கு வார்த்தை வடிவில் சொல்லி தருவது இல்லை
கண்ணாடியின் காட்சியே பிரதிபலிப்பை காட்டி விடும்
அதே போல் பெற்றோரின் நடவடிக்கைகளும் பேச்சுக்களும்
அங்கீகாரங்களும் பிள்ளைகளுக்கு கண்ணாடி போன்றதே
அதன் தாக்கமே எதிர்கால வாழ்வில் சந்ததிகளிடம் உருவமாக வெளிப்படும்
பேச்சு
எழுத்து
நடை
உடை
பாவனை
அனைத்தும் பெற்றோர்கள்
அறிந்தும் அறியாமலும் சந்ததிகளுக்கு கற்று தரும் செய்கைகளே
சந்ததிகள் சீரழிவை நோக்கினால்
இதில் தாய் முதன்மை
குற்றவாளி
தந்தை இரண்டாம் நிலை குற்றவாளி
என்றே மார்க்கம் சொல்கிறது
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்
அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர் அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்
(அல்குர்ஆன் : 66:6)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment