பெற்றோரும் பிள்ளைகளும்
பெற்றோர்களின் புலம்பல்களும்
பிள்ளைகளின் அறிவீனமும்
***********************
J . யாஸீன் இம்தாதி
*****************
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கையை பயன்படுத்தி வழிகேடுகளின் பக்கம் பிள்ளைகள் விரைந்து செல்கின்றனர்
குறிப்பாக பெண் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இளம் பெண்கள் நாசமாக்கி விடுகின்றனர்
படிக்கும் வயதில் சகமாணவனுடன் ஊர் சுற்றுவது
குருட்டு நம்பிக்கையில் கற்பை பறி கொடுப்பது
மாற்றானுடன் மதி மயங்குவது போன்றவை முஸ்லிம் சமூகத்திலும் அதிகரித்து விட்டது
இந்நிலையில் இவர்களின் அருவெருப்பான நடவடிக்கைகள் அவர்களை அறியாமலேயே CCTC கேமரா மற்றும் பிறர் மொபைல்களில் மறைமுகமாக படமாக்கப்பட்டு சமூகவலைதளம் மூலம் பரப்பப்பட்டும் விடுகிறது
நியாயமாக பரப்பியவர்கள் மீது குடும்பத்தார்களுக்கு எற்படும் ஆத்திரம் தங்களின் பிள்ளைகளின் மீதும் தங்களின் அறிவீன வளர்ப்பு முறையின் மீதும் தான் குடும்பத்தார்களுக்கு எற்பட வேண்டும்
இந்தளவுக்கு பெயரை கெடுக்கும் அளவு பிள்ளைகள் நடந்தால்
அந்தளவு அவர்களின் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே தீய எண்ணங்கள் நுழைந்து விட்டது என்பது தான் பொருள்
சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட தகவல்களை அழிக்க முடியாது என்பதை அறிவுள்ளவர்கள் மறந்து விட கூடாது
குறிப்பாக இது போன்ற தகவல்கள் ஆயிரமாயிரம் காப்பிகள் மறு நொடியில் எடுக்கப்பட்டு விடும்
நெருப்பை அறிந்து தொட்டாலும் சுடும்
அறியாது தொட்டாலும் சுடும்
என்பதை பெற்றோர்களும் இளையதலைமுறையினரும் கவனத்தில் கொள்ள வேண்டும்
படிப்பை விட பண்பாடுகளும்
நல்லொழுக்கங்களும் வாழ்வில் முக்கியமானது என்பதை மறவாதீர்
படிக்காத நிலையை வைத்து எதிர்கால வாழ்வு விமர்சிக்கப்படாது
தவறு செய்தவன் திருந்தினாலும் விமர்சனங்கள் மறையாது
பெற்றோர்களை அழ வைக்கும் கண்ணீர் நிச்சயம் இவ்வுலக வாழ்விலேயே தண்டனையை பெற்று தரும்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்
அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர் அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்
(அல்குர்ஆன் : 66:6)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment