ஏகத்துவம்

    முஸ்லிமின் அடிப்படை அறிவு
            *********************
           J . யாஸீன் இம்தாதி
                      ************
இஸ்லாத்தின் அடிப்படை அறிவு
ஏகத்துவம் 

     !! லாயிலாஹ இல்லல்லாஹ் !!
                  என்ற தத்துவம் 

இறைவனின் ஆற்றல் வேறு எதற்கும் இல்லை என்பதே இவ்வார்த்தைகளின்  சாரம் 

இந்த சாரத்தில் உறுதியாக இருப்பதற்கு அடிப்படை தேவை இறைவன் தொடர்பான  கல்வி 

இறைவன் என்றால் யார்? 

இறைவனின் பண்புகள் என்ன ?

இணை வைத்தல் என்றால் என்ன ?

இணை வைத்தலின் விளைவுகள் என்ன? 

என்பது தான் 

இந்த விளக்கங்களை உள்வாங்காத முஸ்லிம்களிடம் ஆயிரமாயிறம் விளக்கங்களை எடுத்து கூறினாலும் இணை வைத்தல் என்ற மாபாதக செயலில் இருந்து நிச்சயம் 
அவன் விடுபட மாட்டான்

அறிவியல் சாதனைகளை 
சாதிப்பவனும் சரி 
மருத்துவனும் சரி 
படித்து பட்டம் பெற்றவனும் சரி 
படிக்காத பாமரனும் சரி 
அதிகாரத்தில் இருப்பவனும் சரி
ஆலீமாகினும் சரி
ஆலீமாவாகிலும் சரி 
இது தான் எதார்த்த உண்மை



இறைவன் அல்லாதவர்களின் துணை கொண்டு( வசீலா அடிப்படையில்)  பிராத்தணை செய்யலாமா

இறைவன் அல்லாதவர்களிடம் நேரடியாக பிராத்தணை செய்யலாமா 

என்ற ஆராய்சியே முஸ்லிம்களை பொருத்தவரை அவசியமற்றது  

தாய்  அல்லாத ஒருவளை 
தாய்  என்று அழைப்பதால் 
அவள் தாய் ஆகி விடுவாளா 

தாய்  அல்லாத ஒருவளை
தாய் ஸ்தானத்தில் அழைப்பதால் அவள்  தாய்  ஆகி விடுவாளா

என்ற இருமுனையில் சிந்தித்தாலும்
தாய் என்ற அந்தஸ்த்தை உண்மையில் யாரும் அடைய முடியாது

எந்த தாயும் 
தன்னை தாய்  என்று பிள்ளைகள்  அழைப்பதை விட 
பிறரை தாய் என்று பிள்ளைகள் அழைப்பதை விரும்பவே மாட்டாள்
பாசத்தில் அழைத்தாலும் சரி
பெயரளவுக்கு அழைத்தாலும் சரி 



என்னை படைத்தவன்
எனது தேவையை ஏற்படுத்தியவன்
தேவைகளை  என்னிடமே கேள் 
என்று குர்ஆனில் கட்டளையிட்டவன்
தேவைகளை கேட்காவிட்டால் 
கோபம் கொள்பவன்
கேட்கும் நபரை கண்டு ஆனந்தம் அடைபவன்  
கேட்கும் தேவைகளை எல்லாம் செவியுருபவன் 
கேட்காமலேயே அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருபவன் 

நான்  சுயமாக கேட்டால் தருவானா?


என்று சந்தேகிப்பதே ஒரு  முஸ்லிமின்  உள்ளத்தில் ஈமான் முழுமையாக நுழையவில்லை என்பதற்கு 
சரியான சான்று  


وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்
பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்

அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்
என்னையே நம்பட்டும்
 அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக

               (அல்குர்ஆன் : 2:186)

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்