கிரகண தொழுகை


            கிரகண தொழுகைகள்
                   *-----------------------*
   
பாங்குடன் இணைக்கப்பட்டு எந்த தொழுகைகள் இஸ்லாத்தில் கூறப்படுகிறதோ அவைகள் மட்டுமே கட்டாய  கடமை என்ற அந்தஸ்த்தை பெறுகிறது 

மற்ற எந்த தொழுகைகளும் 
சுன்னத் நபில் என்ற அந்தஸ்த்தை மட்டுமே பெறும்

சில தொழுகைகள் கடமையான தொழுகைகளுக்கு நெருக்கமான நிலையிலும் 
சில தொழுகைகள் அதிகமான நன்மைகளை பெற்று தரும் என்ற நிலையிலும் 
சில தொழுகைகள் விரும்பினால் தொழுகலாம்  என்ற நிலையிலும் நபிமொழிகளில்  காணப்படும்

கிரகண தொழுகையும்  அதிகமாக வலியுருத்தப்பட்ட சுன்னத்தான தொழுகைகளில்  தான் உள்ளடங்கும் 



وعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُخَوِّفُ اللَّهُ بِهِمَا عِبَادَهُ ، وَإِنَّهُمَا لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنْ النَّاسِ ، فَإِذَا رَأَيْتُمْ مِنْهَا شَيْئًا فَصَلُّوا ، وَادْعُوا اللَّهَ حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ) 
சூரிய சந்திர கிரணம் என்பது யாருடைய இழப்பிற்காகவும் ஏற்படுவது இல்லை 

அது இறைவனின் வல்லமைக்கு உட்பட்டவையே

அதன் மூலம் இறைவன் 
தன் அடியார்களை எச்சரிக்கை செய்கிறான்

அதை கண்டால் உங்களை விட்டு விலகும் வரை தொழுகுங்கள் 

என நபி ஸல் அவர்கள் சொன்னதாக இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அறிவிக்கின்றார் 

               நூல் முஸ்லிம் 1499
     *****************************


1 . உங்களை விட்டு கிரகணம் விலகும் வரை தொழுகுங்கள் என்ற நபிமொழி  வாசகத்தில் இருந்து 
கிரகணம் தென்படும் பகுதியில் வாழும் மக்களே  கிரகண தொழுகையை நிறைவேற்றுவது அவசியம் என்பதும் புரிகிறது 


2 கடமையான தொழுகை நிறைவேற்றும் நேரத்தில்  கிரகணம் ஏற்பட்டால் கிரகணம் நீளும் நேரத்தை கணக்கிட்டு கிரகண தொழுகையை பர்ளு தொழுகையை நிறைவேற்றும்  முன்போ அல்லது பின்போ தொழுது கொள்ளலாம்  

கிரகணம் குறுகிய நேரமே நீடிக்கும் என்ற நிலையில் கடமையான தொழுகையை பிற்படுத்தி கொள்வது குற்றம் ஆகாது 
காரணம் கடமையான தொழுகையின் இறுதி நேரத்திற்கு வாய்புகள் அதிகம் உள்ளது 

கிரகண தொழுகையை நிறைவேற்றுவதற்கு 
!! அவை உங்களை விட்டும் விலகும் வரை தொழுகுங்கள் !! என்ற வரம்பு  சொல்லப்படுகிறது 

இந்த சூழலை பற்றி நபிமொழிகளில் நேரடி சான்று கிடைக்காத நிலையில் எதை முற்படுத்தலாம் ? அல்லது எதை பிற்படுத்தலாம் ? என்று  முடிவு செய்யும் அதிகாரத்தை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு  அவர்கள் செய்யும் இறுதி  முடிவை ஏற்று கொண்டு செயல்படுவது சிறப்பானது 
இவ்விசயத்தில் வீண் விவாதங்கள் தேவையற்றது 

                        **************
          தொழ கூடாத நேரங்கள் 


و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ يَقُولُ ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَانَا أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ وَحِينَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை

2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை

3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1373
                            ********

இந்த நபிமொழியை கருத்தில் கொண்டு இந்நேரங்களில் கடமை மற்றும்  எந்த தொழுகைகளையும் நிறைவேற்றுவதை தவிர்க்க வேண்டும்

சில இடங்களில் பேணுதல் என்ற காரணத்தை சொல்லி தடுக்கப்பட்ட நேரத்தின் அளவை தாண்டியும் 
பத்து நிமிடத்திற்கு மேல் தொழ கூடாத நேரத்தின் அளவை நீளமாக்கி வைத்திருப்பார்கள் 

அந்த மதிப்பீடும் தவறானவையாகும்

சூரியன் மறைந்த பின்  நோன்பு திறக்க வேண்டும் என்ற நபிமொழியை எவ்வாறு நடை முறை படுத்துகிறோம்  ?

சூரியன் மறைய துவங்கும் துவக்க நேரத்தை யாரும்  கருத்தில் கொள்வது இல்லை 
மாறாக முழுமையாக நம்மை விட்டு சூரியன்  மறையும் நிமிடங்களை தான் கருத்தில் கொள்கிறோம் 
அதன் பின்பே நோன்பு திறக்கிறோம்

இதே புரிதலை மேற்காணும் ஹதீசிலும் கணக்கிட்டால் 
தடுக்கப்பட்ட தொழுகையின் மூன்று  நேரம் என்பதும் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்கள் தான் நீடிக்கும் வாய்ப்பு இருக்கும் 
அறிவியல் ஞானம் உள்ளோரிடம் இதை கேட்டு தெரிந்து கொள்ளவும்

அல்லது பத்திரிக்கையில் அன்றாடம் வெளியிடப்படும் சூரிய அஸ்தமன பட்டியலை காணவும் 

    நட்புடன்  J . யாஸீன் இம்தாதி




Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்