நபிகளாரின் மண்ணறை

            நபிகளாரின் மண்ணறை 
                     ***************
                  கட்டுரை எண் 1152
              J . யாஸீன் (இம்தாதி)
                     ***************

சமூகவலைதளங்களில் நபிகள் நாயகம் (ஸல்  அவர்கள் அணிந்த தலைப்பாகை மேலங்கி கீழங்கி என்ற பெயரில்  புகைப்படங்கள் அதிகமாக  பரப்பப்படுகிறது 

யூடியூப் வீடியோக்களில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் மண்ணறை ( தர்ஹா)  வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது

இவைகள் எதுவும் சவுதி அரசால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை 

ஹஜ்ஜுக்கு சென்றவர்களும் மதீனாவில் வாழ்பவர்களும் கூட நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் மண்ணறையை நேர்முகமாக பார்த்ததும் இல்லை 
பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை

அதிகபட்சமாக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட திசையை தான் பார்த்து வருகின்றனர்

சவுதி மன்னரும் அவர் அனுமதிக்கும் அரசு குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறையை நேரிடையாக காண முடியும் 

அங்கு பணி செய்பவர்களும் கூட நபிகளாரின் நேரடி மண்ணறையை காண  அனுமதிக்கப்படுவது இல்லை 

இது நெடுங்காலமாகவே இருந்து வரும் வழிமுறை 

ஒரு வேளை அனுமதிக்கப்பட்டால் அல்லாஹ்வை வணங்குபவர்களை விட நபிகளாரின் மண்ணறையை புகைப்படம் எடுத்து அலங்கரித்து இல்லங்களில் தொங்க விட்டு  
அதை நோக்கி துஆ செய்பவர்களையும் வணங்குபவர்களை தான் முஸ்லிம்களில் அநேகரை காண முடியும் 
காரணம் அந்தளவிற்கு முஸ்லிம் சமுதாயத்தின் மார்க்க அறியாமை அதிகரித்து உள்ளது 
ஊர்ஜிதம் செய்யப்படாத முடியை நபிகளாரின் தலைமுடி என்ற பெயரில் முடியை புனிதமாக்கி  அறிவை முடமாக்கி வரும் பெரும் கூட்டமே தற்போது அதிகரித்துள்ளது 

இத்தனை கட்டுப்பாடுகளும் இருந்து வரும்  நிலையில் முஸ்லிம் சமுதாயத்தின் அறிவீனமும் மூடத்தனமும்  இந்தளவுக்கு இருக்கிறது எனில்
நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் மண்ணறையை புகைப்படமாக எடுத்து சவுதி அரசு வெளியிட்டால் எந்தளவுக்கு வழிகேடுகள் இணைவைப்புகள்  தலைவிரித்தாடும் என்பதற்கு இவைகளே சரியான சான்று  

மக்கா மதீனாவில் இபாதத் செய்யும் போதே கைகளில் மொபைலை வைத்து கொண்டு செல்பி பைத்தியங்களாக அலையும் மக்களிடம் நபிகளாரின் மண்ணறையை காண அனுமதி வழங்கினால் எந்தளவுக்கு விபரீதம் ஏற்படும் என்பதையும் சிந்தித்து பாருங்கள் 

நபிகளாரை உயிரை விட அதிகமாக நேசிக்கும் முஸ்லிம்கள்
அவர்களுக்காக பிராத்தணை செய்வதும் சலவாத் ஓதுவதும் அவர்கள் காட்டிய வழியில் வாழ்கை முறையை அமைப்பதும் தான் நபிகளாரை நேசிக்கும் உண்மையான வடிவம் 

இதை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதித்தார்கள் 
அவர்களின் மண்ணறை திருவிழா நடைபெறும் இடமாக மாறிவிட கூடாது என்பதில் அதிகமான அச்சத்தையும்  வெளிப்படுத்தியுள்ளார்கள்



– حدَّثنا أحمدُ بنُ صالح، قرأتُ على عبدِ الله بنِ نافع، قال: أخبرني ابنُ أبي ذئبٍ، عن سعيدٍ المقبري عن أبي هُريرة، قال: قال رسولُ الله – صلَّى الله عليه وسلم -: "لا تجعلوا بيوتَكُم قُبوراً، ولا تجعلُوا قَبْرِي عِيداً؛ وصلُّوا عليَّ فإن صلاتكُم تُبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ"

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள் மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 2042


2lحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَ     ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர் அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873


         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்