குருட்டு பக்தி

          குருட்டு பக்தியின் காரணம் 
                       ************
            J . யாஸீன் இம்தாதி
                         ********
தன்னிடம் இல்லாத ஒன்றை 
அநேகமானவர்களால் செய்ய 
முடியாத ஒன்றை


பிற மனிதன் செய்யும் போது இயல்பாகவாகவே அந்த மனிதனை  மனம் விரும்ப துவங்கும் 


கண்டுபிடிப்பு
எழுத்தாற்றல்
பேச்சாற்றல் 
போன்றவை இதற்கு உதாரணம்

அந்த விருப்பம் அதிகமாகும் பட்சத்தில்   குருட்டு  பக்தியாக மாறும் நிலை ஏற்படும்

இந்த தன்மை  படிக்காத மக்களை  மட்டும் அல்ல படித்த மக்களையும்  முட்டாளாக்கும் 

இதன் உச்சகட்டமே  சினிமா 
 நடிகர் நடிகைகள் மீது ஏற்படும் மோகம் 


அந்த மோகத்தின் விளைவே 
ரசிகர் மன்றங்கள் வைப்பது 
அவர்களை போவே தன்னை உருமாற்றம் செய்து கொள்வது 
அவர்களை தொட்டு பார்ப்பதை புண்ணியமாக கருதுவது
அவர்களின் புகைப்படங்களை 
பச்சை குத்தி கொள்வது 
அவர்களின் இல்லங்களுக்கு முன்
காத்து கிடப்பது 
அரசியல் அதிகாரத்தை கொடுத்தால் நாட்டையே புரட்டி போட்டு விடுவார்கள் என்ற கற்பனையில் மிதப்பது 


சினிமா கூத்தாடிகளை  பொருத்தவரை கடுகளவு தகுதியும் இவ்விசயத்தில்  இல்லை 

காரணம் ஒரு நடிகன் நடிகை 
திரைப்படத்தில் வெளிப்படுத்தும் எதுவும் அவர்களுக்கு சொந்தமானது இல்லை 

வசனம் ஒருவருக்கு சொந்தம்

பின்னனி இசை ஒருவருக்கு சொந்தம்

கதை ஒருவருக்கு சொந்தம்

பாடல் வரிகள் ஒருவருக்கு சொந்தம்

பாடும் குரல் ஒருவருக்கு சொந்தம்

சண்டையிடும் முறை ஒருவருக்கு சொந்தம் 

வெளிப்படுத்தும் செய்கைகளின் வடிவம் ஒருவருக்கு சொந்தம்

ஆடை ஒருவருக்கு சொந்தம்

மேக்கப் ஒருவருக்கு சொந்தம் 

சுருங்க சொன்னால் 
ஒரு ஹீரோவுக்கு பின்னால் நூறுக்கும் மேற்பட்டோரின் கடின  உழைப்பு மறைந்துள்ளது 

அவர்களின் முகங்களை கூட
 பலர் அறிந்தே இருக்க மாட்டார்கள் 

ஆனால் அவர்களின் உழைப்பிற்கு உடல் அசைவால் காட்சி தரும் 
ஒருவர் மட்டுமே வெளியுலகில் திறமைவாய்ந்த கதாநாயகனாக கதாநாயகியாக  வலம் வருவார்கள்

இதை உணர்ந்தோரின் உள்ளத்தில் சினிமா கூத்தாடிகள் எவரும் உச்சத்தில் காட்சி தர மாட்டார்கள் 

இதை உணராதோர்  அறிவிலிகளாகவே தனது வாழ்வை தொடர்வார்கள் 

ஆன்மீகத்தில் இந்த அறிவிலித்தனம் 
அதிகமாக காணப்படும் 

குருட்டு பக்தியை எதிர்ப்போர் கூட
தன்னிடம் உள்ள குருட்டு பக்தியை சிந்திக்க முற்படுவது இல்லை 

               நட்புடன்  J . இம்தாதி





Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்