சந்ததிகள் வளர்ப்பு முறை
சந்ததிகள் வளர்ப்பு முறை
***************
கட்டுரை எண் 1149
----------------
மனிதனின் அறிவுக்கு
இரண்டு நிலை உண்டு
ஒரு நிலை சிறு வயதில் ஊட்டப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் எந்நேரமும் பயணிக்கும்
மறு நிலை சுயமாக சிந்திக்கும் தன்மையில் பயணிக்கும்
உலகில் புதிதாக எந்த ஒன்றை கேள்விபட்டாலும் ஏற்கனவே ஊட்டப்பட்ட நம்பிக்கையுடன் இணைத்தே மனிதனின் அறிவு
முடிவு செய்து விடும்
சிறு வயதில் பேய் பிசாசு என்ற பொய்யான நம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட மனிதன்
பருவ வயதை எட்டிய பின்னும்
வித்தியாசமான ஓசையை
நடு இரவில் செவியுற்றால்
அந்த ஓசையின் பின்னனி என்பதை சிந்திக்கும் முன் ஏற்கனவே ஊட்டப்பட்ட பேய் பிசாசு ஓசையாக இருக்குமோ என்றே யோசிக்க தோணும்
காரணம் ஏற்கனவே அவனது
அறிவில் பேய் பிசாசு என்ற பொய்யான நம்பிக்கை சமூகத்தால் ஊட்டப்பட்டு விட்டது
கண்டு பிடிப்பு வேறு
படைத்தல் என்பது வேறு
என்ற வேறுபாட்டை கற்று தராது நாத்தீகனாக வளர்க்கப்படும் மனிதனின் சிந்தனை
அறிவியல் துணை கொண்டு
எதை கேள்வி பட்டாலும்
அதை மனிதனே படைத்ததாக எண்ணி தற்பெருமை அடைவானே தவிர அறிவியல் துணையால்
கண்டறியும் முன்பே அந்த பொருள் பிரபஞ்சத்தில் இருந்து வருவது எப்படி? அதை யார் உருவாக்கி வைத்துள்ளது என்பதை கடுகளவும் சிந்திக்க முற்பட மாட்டான்
இதை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டிய சிந்தனையை பக்குவமாக சிறு வயதில் போதிக்க வேண்டும்
இல்லாத ஒன்றை நம்ப வைத்து குழந்தைகளை பயமுறுத்துவதும்
இருக்கின்ற ஒன்றை இல்லாததை போல் சித்தரித்து அவர்களின் அச்சத்தை நீக்குவதும்
தடை இல்லாத ஒன்றை
தடை போல் சித்தரிப்பதும்
தடையாக்கப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதை போல் அங்கீகாரம் கொடுப்பதும்
சந்ததிகளின் எதிர் காலத்தை நாசமாக்கி விடும்
வளர்ந்த பின் தானாக குழந்தைகள் அறிந்து கொள்வார்கள் என்ற போலியான காரணங்களை கற்பித்து வளரும் பருவத்தில் குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளை கண்டும் காணாது இருந்து விட்டு விளைவுகளை சந்தித்த பின் புலம்பும் பெற்றோர்கள் அதிகம்
எந்தளவுக்கு வெட்க உணர்வை குழந்தைகளுக்கு போதிக்கிறீர்களோ அந்தளவுக்கு தீமைகளில் இருந்து அவர்கள் நீங்கி இருப்பார்கள்
எந்தளவு ஒப்பீடு முறையை கற்று தருவீர்களோ அந்தளவு மூட நம்பிக்கைகளில் இருந்து நீங்கி இருப்பார்கள்
நோய் வரும் நேரத்தில் குழந்தைகளுக்கு கைகளில் மந்திரித்து ஊதிய கயிறுகளை கட்டி வளர்த்தினால் வளர்ந்த பின் அவர்கள் அவர்களது சந்ததியின் இடுப்பில் கயிறுகளை கட்டியே நோய் நீக்கிட முயற்சிப்பார்கள்
இஸ்லாம் இவ்விசயத்தை மையமாக வைத்தே குழந்தை வளர்ப்பு பாடத்தை மனித சமுதாயத்திற்கு போதனை செய்கிறது
மனிதன் கண் விழித்து உலகில் ஜனிக்கும் முதல் கண் மூடி மரணித்து மண்ணுக்குள் திணிக்கும் வரை வாழ்வியல் நெறிகளை அழகாக முழுமையாக கற்று தரும் மார்க்கமே இஸ்லாம்
يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே இருப்பினும்
அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும்
அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்
நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன் (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்
(அல்குர்ஆன் : 31:16)
நட்புடன் J. யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment