கழிப்பறை உள்ளம்

              கழிப்பறை உள்ளம்
               *****************
    கட்டுரை எண் 1148- J . யாஸீன்
                          ********
பிற மனிதன் பொருளாதாரத்தில் கீழ்நிலையை சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே 
அந்த மனிதன் மட்டமானவன் என்பதற்கு சரியான சான்று 

ஆடையை அலங்காரமாக  அணிந்து
பேச்சில் ஈமானிய இறுக்கம்  இருப்பது போல் வெளியே காட்டி கொண்டாலும் உள்ளத்தில் அவனே கேடு கெட்டவன் 

லஞ்சம் வாங்குபவனும் கூட 
பிறர் பொருளை நயமாக கேட்டு தான் பெறுகிறான்

பிறர் முன்னேற்றம் தடை பட வேண்டும் என்று நினைப்பவனோ முற்றிலும் பிறர் பொருளை நாசமாக்கவே   விரும்புகிறான் 

நீ விரும்பியதை உன்னை சார்ந்தவனுக்கும் விரும்பு 
என்ற நபிமொழியை  வெறுப்பாக காணுகிறான் 

இது போல் தீய குணமுடையோர் வாழும் கூட்டத்தில் தான் நல்லோர்களும் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது 



எவன் தடுத்தாலும் உனக்கு விதித்த பொருளியல் உன்னை விட்டு போகாது

எவன் கொடுத்தாலும் உனக்கு விதியாக்காத ஏதும் உன் கைவசம்  தங்காது

தீய குணம் உடையோருக்கு வருமானம் பெருகுவது போல் காட்சி தரும்

ஆனால் அந்த வருமானம்
மருத்துவமனைகளுக்கும்
பிள்ளைகளின் சீர்கேடுகளுக்கும்
சட்ட சிக்கல்களுக்கும் 
ஏதோ ஓர் வகையில் நாசமாகி கொண்டே இருக்கும்

காரணம் சோதனைகளுக்கு 
பல வடிவம் உண்டு

அந்த வடிவத்தின் பின்னனி
 உன்னால் மனம் நொந்தவன் இறைவனிடம் அன்றாடம் செய்து வரும் பிராத்தணையின் வினையாகவும் இருக்க கூடும் 

உள்ளம் கழிப்பறை அல்ல
தீய குணங்களை நிறைப்பதற்கு 

உள்ளத்தில் அழகிய குணம் கொண்டவனே உருவத்தில் விகாரமாக தோன்றினாலும் இறைவனிடத்தில் மேலானவன் 

உருவத்தில் அழகை பெற்று உள்ளத்தில் கழிவுகளை சுமப்பவன் 
இறைவனிடத்திலும் கீழானவன்
அவன் குணம் அறிந்தோரிடமும் மட்டமானவன் 



عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: "هلك المُتَنَطِّعون -قالها ثلاثا-".  
[صحيح] - [رواه مسلم]

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்

எல்லை மீறுபவர்கள் அழிந்தனர் இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்

  நூல் முஸ்லிம் இப்னு மஸ்ஊத் ரலி 

           நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்