குழந்தைகள் தினமா
குழந்தைகள் நினைவு தினமா
பெற்றோர்கள் வருந்தும் தினமா
*********************
J . யாஸீன் (இம்தாதி)
--------------------
கட்டுரை எண் 1147 பதிவு 14-11-2022
*******
ஈன்றெடுத்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் தன்மை அனைத்து உயிர்களிடமும் காணப்படும் இயற்கையான குணம்
உருவத்தில் பிரமாண்டமான
யானை முதல் மனித கண்ணுக்கு தெரியாத கிருமிகள் வரை இந்த தன்மையில் விதி விலக்கு இல்லை
பறந்து செல்வதற்கு இயலாத கோழிகள் கூட பருந்துகள்
தன் குஞ்சை அபகரிக்க வரும் பொழுது உயர பறந்து ஆக்ரோசமாக விரட்டி அடிக்கும்
குஞ்சுகள் பக்குவ வயதை அடையும் வரை சேவலுடன் இணை சேர்வதை தாய்க் கோழிகள் தவிர்க்கும்
முட்டையிடுவதை காலம் கடத்தும்
காரணம் தன்னால் ஈன்ற குஞ்சுகளை கவனிக்கும் கடமையை பகுத்தறிவு இல்லாத தாய் கோழிகளும் அறிந்தே உள்ளன
எந்த ஜீவராசிகளும் தன்னால் ஈன்றெடுக்கப்பட்ட குட்டிகளை குஞ்சுகளை பிற ஜீவராசிகளின் கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு ஊர்மேய செல்வதும் இல்லை
இயற்கைக்கு மாற்றமான செயல் முறைகளை குஞ்சுகளுக்கும் குட்டிகளுக்கும் கற்று தருவதும் இல்லை
இதில் விதிவிலக்கு பெற்ற இனமே மனித சமூகம்
பகுத்தறிவு பெற்ற மனித சமூகமே தனது பிள்ளைகளை சரியான முறையில் கவனிக்காது வளரும் சமூகத்தை சீரழித்து வருகின்றனர்
உலக மோகம் அதிகரித்ததின் விளைவாக ஈன்றெடுத்த பிள்ளைகளை கூட வேலைக்காரியிடம் ஒப்படைத்து செல்லும் அவலம் நீடிக்கிறது
தனது பிள்ளைகள் சீரழிவை நோக்கி செல்வார்கள் என்பதை அறிந்து கொண்டே அதற்கு தேவையான உபகரணங்களை பாசத்தை காரணம் காட்டி வாங்கி தருகின்றனர்
பிள்ளைகளின் உணவிலும் ஆரோக்யத்திலும் கவனம் செலுத்தி விட்டு அவர்களின் நல்லொழுக்கத்திலும் எதிர் கால வாழ்விலும் கவனம் செலுத்துவது அரிதாகி விட்டது
இதன் விளைவே மனித சமூகத்தில் தீயவர்களும் மதுபான அடிமைகளும் மூடர்களும் கோழைகளும் ஒழுங்கீனர்களும் ரவுடிகளும் அதிகரித்திருப்பதை பரவலாக காண முடிகிறது
இதன் காரணமாகவே இஸ்லாம் குழந்தைகளை கண்காணிப்பதை பெற்றோர் மீது விதியாக்கியுள்ளது
பெயர் சூட்டுவது
ஆடை உடுத்துவது
கல்வியை கற்று கொடுப்பது
கோழைதன்மையை நீக்குவது
வீரத்தை கற்று தருவது
விவேகத்தை கற்று தருவது
உலக மோகத்தை நீக்குவது
திறமைகளை போதிப்பது
போன்ற அனைத்தையும் கற்று கொடுத்து அவைகளில் கவனம் செலுத்தாது மரணிக்கும் பெற்றோர்களுக்கு மறுமையில் கடுமையான தண்டனையும் உண்டு என்பதை ஆழமாக கற்று தருகிறது இஸ்லாம்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்
அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர் அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்
(அல்குர்ஆன் : 66:6)
நட்புடன் . J இம்தாதி
Comments
Post a Comment