காபிர் எனும் சொல்

          காபிர் எனும் அரபுச்சொல்
                     அறியாமை
        *****************************
             J . யாஸீன் இம்தாதி
                    **************

                       காபிர் காபிர் 

முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை அரபு மொழியில் குறிப்பிடும் வாசகமே  காபிர் 

காபிர் என்ற அரபு வாசகத்தை 
பயன் படுத்தி முஸ்லிம் அல்லாத சமூகத்தை முஸ்லிம்கள் இழிவு படுத்தி பேசுகிறார்கள் என்று சில அறிவிலிகள் திசை திருப்பும் வார்த்தையாக அமைந்திருப்பதும் காபிர் எனும் வார்த்தையாகும்

காபிர் என்ற அரபு சொல்லுக்கு

மறுப்பவர்
புறக்கணிப்பவர்
ஏற்காதவர் 

என்பதே சுருக்கமான பொருள் 

மதுபானத்தை ஒரு முஸ்லிம் நண்பர் தரும் போது மதுபானத்தை வாங்க மறுக்கும் முஸ்லிம் அல்லாத நண்பரும் முஸ்லிம் நண்பரை அவ்விசயத்தில் காபிர் என்று குறிப்பிட முடியும் 

விபச்சாரத்திற்கு ஒரு முஸ்லிம் நண்பர் அழைக்கும் பொழுது அந்த அழைப்பை வெறுத்து மறுக்கும் முஸ்லிம் அல்லாத நண்பரும் முஸ்லிம் நண்பரை அவ்விசயத்தில் காபிர் என்று குறிப்பிட  முடியும் 

ஏன் இந்து மதத்தையும் 
கிருஸ்தவ மதத்தையும்
முஸ்லிம்கள் ஏற்காத போது முஸ்லிம்களையும் 
பிற சமூகத்தவர்கள்
அரபு மொழியில்  அவர்கள் விரும்பினால்  காபிர் என்று குறிப்பிட  முடியும் 

அதே போல் இஸ்லாமிய மார்க்கத்தை ஒருவர் ஏற்காத போது அவரை முஸ்லிம்கள் பார்வையில் 
அரபு மொழியில் காபிர் என்று குறிப்பிடுவது பிற சமூகத்தை  இழிவுபடுத்துவதற்கு அல்ல என்பதை மாற்றார்கள்  முதலில் புரிந்து கொள்ளுங்கள் 

திருக்குர்ஆனில் முஸ்லிம் அல்லாதவர்களை  காபிர் என்ற வாசகத்தின் மூலம் வேறுபடுத்துவது இஸ்லாத்தை ஏற்காதவர்
இஸ்லாத்தை மறுப்பவர்
இஸ்லாத்தை விரும்பாதவர் 
என்பது தான் விளக்கமே தவிர 

காபிர் என்ற அரபு வாசகத்திற்கு மட்டமானவன்
மோசமானவன்
பித்தலாட்டம் செய்பவன்
வெறுக்கதக்கவன் 
வஞ்சகன்
திருடன்
அயோக்கியன் 
படுகொலை செய்யப்படுபவன்
விரட்டி அடிக்கப்படுபவன்
என்பதெல்லாம் பொருள்கள் அல்ல

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அறிவுப்பூர்வமான முறையில்  விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது 

ஆனால் உரிமை என்ற பெயரில் 
தவறாக விமர்சிப்பது
தவறாக விளங்கி விமர்சிப்பது
இட்டுகட்டி விமர்சிப்பது 
அவதூறாக விமர்சிப்பது 
இவைகளே கண்டிக்க தக்கவையாகும்


ஒரு மொழியின் வார்த்தையை விமர்சிப்பதாக இருந்தால் அம்மொழி அறிந்தவர்களிடம் விளக்கம் கேட்டு விட்டு விமர்சனம் செய்ய முற்படுங்கள்
அதுவே சிறந்த அணுகுமுறை 


          நட்புடன்  J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்