சிந்தனை செய் மனமே

          சிந்தனை செய் மனமே
                  ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
            J . யாஸீன் இம்தாதி
                        *********
ஊட்டப்பட்ட சிந்தனையை விட
பயிற்றுவிக்கப்பட்ட சிந்தனையை விட
பகுத்தறிவால்  செதுக்கப்படும்
ஞானமே சரியான சிந்தனை

அடகு வைப்பதற்கு சிந்தனை என்பது மனிதனின் உதிரிப் பொருளும் அல்ல
விற்பனை செய்வதற்கு சிந்தனை என்பது வணிகப்பொருளும் அல்ல

தீர்வை நோக்கி பயணிக்காதது சிந்தனையும் அல்ல
முரண்பாடுகளை ஜீரணிப்பது 
சிந்தனையும் அல்ல

வழங்கப்பட்ட வேதத்தை கூட சிந்தித்து ஏற்க சொல்லும் மார்க்கமே இஸ்லாம்

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
என்ற நாகூர் அனீபா பாடலை ரசித்து கொண்டே 
அருளார்கு அருள் செய்யும் அம்மா
கடலோரம் வாழ்கின்ற பீமா 
என்ற பாடலையும்  ரசித்தால்
நீ சிந்தனையை செதுக்கவில்லை
மாறாக சிந்தனையை 
கவிதை எனும் கழிவு புதைகுழிக்குள் அடக்கம் செய்திருக்கின்றாய்

தாய்மைக்கு நிகர் யாரும் இல்லை
என்று கருத்து பேசும் உனக்கு
தாய்மையை படைத்த இறைவனுக்கு நிகர் யாரும் இல்லை என்று தெளிவாக முடிவு செய்வதற்கு  ஏன் இயலவில்லை 

உருவானவைகளும் 
உருவாக்கப்பட்டவைகளும்
உன்னை படைத்த இறைவனாக இருக்க முடியாது 

கற்களால் உருவான சிலைகளை கடவுளாக நீ வணங்குவதை விட
அக்கற்களை சிலைகளாக உருவாக்கிய குயவனையே  வணக்கத்திற்கு உரியவனாக  கருதுவதே ஒரு வகையில் மேல் 

ஆனால் அந்த குயவனை 
நீ கடவுளாக வணங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ?

குயவன் 
மலம் ஜலம் சுமப்பவன்
பலவீனமானவன்
உறங்குபவன்
உண்ணுபவன்
நோய்களால் சிக்குபவன்
பிறந்தவன்
இறப்பவன் 

இவை தானே 
உன் சிந்தனை குயவனை  கடவுளாக வணங்க தடுக்கிறது 

இதே சிந்தனையை 
எப்போதும் நீ சமமாக்கினால் 
உன் சிந்தனையை மறுநிமிடமே  செவ்வையாக்குவாய் 

இறைவனுக்கு மட்டுமே 
நீ தூய அடியானாக அடிமைபடுத்தப்படாதவனாக
வலம் வருவாய் 

இதன் மூலமே
மறுமையில் நீ ஜெயம் பெறுவாய்

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌  وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏

நிச்சயமாக இறைவன் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்

இதைத்தவிர (மற்ற) எதையும் இறைவன்  நாடியவர்களுக்கு மன்னிப்பான்

யார் இறைவனுக்கு  இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை  செய்கின்றனர்


               (அல்குர்ஆன் : 4:48)

             நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்