அளவற்ற அருளாளன்
அளவற்ற அருளாளன்
நிகர் இல்லாத அன்புடையோன்
என் இறைவன்
*****************************
துச்சம் எச்சம்
J . யாஸீன் இம்தாதி
************
கட்டுரை எண் 1145
*************
இறைவன் திருக்குர்ஆனில் தன்னை அளவற்ற அருளாளன் என்று பல முறை வலியுருத்தும் நிலையில்
பாவிகளை நேராக அழைத்து
உங்கள் பாவங்களை நான் மன்னிப்பேன் என்று பல முறை குர்ஆனில் வலியுருத்தும் நிலையில்
என்னை விட பாவத்தை அருள் கூர்ந்து மன்னிப்பவன் யார் இருக்க இயலும் ? என்று தனது அருளையே தற்பெருமையாக குர்ஆனில் கூறும் நிலையில்
தனது அருள் மீது நிராசை அடைபவர்கள் பாவிகள் என்று குர்ஆனில் கடுமையாக குற்றம் சாட்டும் நிலையில்
அழிக்க வேண்டிய சமூகத்தை மன்னித்ததுடன் அவர்களுக்கு அருள் செய்ததை வெறுத்து தனது அதிருப்தியை வெளிக்காட்டிய நபி யூனுஸ் (அலை)அவர்களை கடுமையாக கண்டித்து குர்ஆனில் இறைவனே குறிப்பிட்ட நிலையில்
கையேந்தி கேட்காத நிலையில் கூட அனைத்து உயிர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை அமைப்பை இறைவன் படைத்த நிலையில்
மனித சமூகம் கண்டு கொள்ளாத காட்டு விலங்குகளின் தேவைகளை கூட பூர்த்தி செய்து வரும் இறைவன் இருக்கும் நிலையில்
இறைவனை மறுக்கும் நாத்தீகர்களை உடனடியாக தண்டிக்காது அவர்களும் மனம் மாற இறைவனே அவர்களுக்கு நீண்ட வாய்ப்பு கொடுத்து அருள் செய்து வரும் நிலையில்
எனது அர்ப்பமான தேவைகளை இறைவனிடம் முறையிட நல்லடியார்கள் மூலம் தான் கையேந்த வேண்டும் என்ற அவசியம் எனக்கு எதற்கு ?
நல்லடியார்கள் துணையின்றி
துஆ செய்தால் எனது பிராத்தணையை இறைவன் குப்பையில் வீசி விடுவானா ?
நல்லடியார்கள் துணை இல்லாது நான் துஆ செய்தால் நீ யார் ?
உன்னை எனக்கு அடையாளம் தெரியவில்லையே ?
உன்னை அறிமுகம் செய்ய
நான் அறிந்த ஒரு நல்லடியாரை என்னிடம் பரிந்துறைக்கு அழைத்து வா என்று எனது இறைவன்
அவன் அருள் மீது நான் வைத்துள்ள நன்மதிப்பை அவனே கெடுத்து கொள்ள விரும்புவானா
நான் கேட்காமலே எனது பல தேவைகளை இந்த நிமிடம் வரை நிறைவேற்றி வரும் அருளாளனாகிய என் இறைவன்
நான் கேட்கும் சில தேவைகளை
பிறர் துணை இல்லாது கண்டு கொள்ள மாட்டான் என்று நினைப்பதையே நான் அவமானமாக கருதுகிறேன்
என் இறைவனுக்கு செய்யும்
பச்சை துரோகமாக கருதுகிறேன்
என் இறைவனிடம் மட்டுமே
என் தேவைகளை முறையிடுவேன் அவனிடம் மாத்திரமே மன்றாடுவேன் என்று ஆணித்தரமாக நம்பும் எனது இறைநம்பிக்கையை நீ துச்சமாக கருதினால்
அதை மறுக்கும் உன்னை
நான் காகத்தின் எச்சமாக கூட
மதிக்க மாட்டேன்
قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ
வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்
(அல்குர்ஆன் : 15:56)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment