பன்றி

      பன்றியை முற்றிலும் வெறுப்பது
                ஈமானின் அளவுகோலா
                      ******************
                  J . YASEEN IMTHADHI
                        ************

பன்றி இறைச்சி
மார்க்கத்தில் உண்ண தடை செய்யப்பட்ட ஒரு பிராணி 

பன்றி இறைச்சி உண்ணுவதால் இறை கட்டளையை மீறும் தண்டனையை அனுபவிப்பானே தவிர  அதனால்  நிரந்தரமான நரகை எந்த முஸ்லிமும் அடைய போவது இல்லை 

பன்றியை உண்ணாதீர்கள் என்று 
எந்த அறிஞரும் முஸ்லிம் சமுதாயத்திற்கு அடிக்கடி நினைவு கூறுவதும் இல்லை 

ஆனாலும் இஸ்லாம் தடுத்த ஹராமான காரியங்களில் முதன்மை காரியமாக முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாக பதிவாகி இருப்பதும் 
பன்றி என்ற பெயரை மொழிவதை கூட அருவெறுப்பாக கருதும் அளவு ஒதுக்கப்பட்ட ஒன்றாக உள்ளத்தில் இருப்பதும் பன்றி என்ற உயிரினம் தான்   !!

இறைவனின் கட்டளை என்பதால் தான் பன்றியை இந்தளவுக்கு நீங்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளீர்கள் என்பது உண்மையெனில் 
உங்கள் மனசாட்சியில் கைவைத்து நீங்களே எதிர் கேள்வி கேட்டு கொள்ளுங்கள் 



இதை விட இஸ்லாம் பெரும்பாவமாக கருதும் விசயங்களில் 

இணை வைத்தல்
தர்ஹா வழிபாடு 
வட்டி  
வரதட்சணை 
தற்கொலை 
அவதூறு கூறுதல்
பித்அத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தல்
கடமையான  தொழுகையை  புறக்கணித்தல் 
போன்றவையாகும் 



இவைகளை பெரும்பாவமாக இறைவனுக்கு கோபமூட்டும் பாவமாக மாத்திரம் அல்ல 
சிறு பாவமாக கூட நீ ஏன் கருதுவது இல்லை 

அப்படியானால் பன்றியின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு மாத்திரம் தான் உனது  இறையச்சத்தின் உச்சமா  ?

என்பதை படிப்போரின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன் 

         நட்புடன் J . இம்தாதி




Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்