வெட்கம்

         வெட்கமே உயரிய பண்பு

            √√√√√√√√√√√√√√
              J . யாஸீன் இம்தாதி
                         **********
ஒரு மனிதன் வளரும் பருவத்தில் எதை வழமையாக்கி கொள்கிறானோ அதை பகிரங்கமாக செய்யவும் தயங்க மாட்டான் 
அது உயரிய செயலாக 
இருப்பினும் சரி
கீழ்த்தரமான செயலாக 
இருப்பினும் சரி 

அங்கங்களை வெளிகாட்டி திரியும் பெண்களுக்கு மத்தியில்
பனியன் அணியாமல் செல்வதை கூட அசிங்கமாக கருதும் ஆடவன் உண்டு

மதுபானத்தை நடுரோட்டில் அருந்தி திரியும் மனிதர்களுக்கு இடையில் 
உணவுகளை பகிரங்கமாக உண்ணுவதற்கு கூட கூச்சப்படும் மனிதர்களும் உண்டு

தீய வார்த்தைகளை பச்சையாக 
பேசி திரியும் மனிதனுக்கு இடையில் 
நல்ல வார்த்தைகளை பேசுவதற்கு கூட தயக்கப்படும் மனிதர்களும் உண்டு

சுருங்க சொன்னால் 
வெட்கம் எனும் தன்மை 
எந்தளவு ஒரு மனிதனிடம் இடம் பெற்றுள்ளதோ அந்தளவுக்கு  அம்மனிதனின் வாழ்வு தனிமையிலும் வெளிரங்கத்திலும்  தூய்மையாக அமைந்திருக்கும் 

அதனால் தான் வெட்கம் எனும் தன்மையை இஸ்லாம் அதிகமாக போதிக்கிறது 


ஈமானில் ஒரு பகுதியாக இஸ்லாம் வெட்கத்தை அறிமுகம் செய்கிறது 

கன்னிப்பெண்ணிடம் இருக்க வேண்டிய வெட்கத்தை விட கூடுதலாக வெட்கம் எனும் உணர்வை நபியவர்களிடம் கண்டதாக நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்

பேச்சில் வெட்கம்
உடையில் வெட்கம்
நடையில் வெட்கம்
எழுத்தில் வெட்கம் 
பார்வையில் வெட்கம் 

இப்படி வெட்கத்திற்கு 
பல கிளைகள் உண்டு 

பிறருடன் ஒப்பிட்டு பார்த்தால் தன்னிடம் எந்தளவுக்கு வெட்கம் எனும் தன்மை எடுபட்டுபோய் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்



 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ زُهَيْرٍ ، حَدَّثَنَا مَنْصُورٌ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்றுதான், “நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்” என்பதும்.

அறி: அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி),

நூல்: புகாரி-3483 , 3484,6120


 حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ : حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ  حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் (நாணமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.

அறி : அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி-9 



            நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்