ஒளி ஆண்டும் ஒப்பற்றவனும்
ஒளி ஆண்டும் ஒப்பற்றவனும்
♦♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1441
J YASEEN IMDHATHI
*********
அறிய வேண்டிய முதல் விசயம்
நாம் பயணிக்கும் ஒவ்வொரு வாகனமும் பலதரப்பட்டப்பட்ட வேகம் கொண்டதாகும்
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில்
அதி வேகமாக பயணிக்க கூடிய
ஒன்று ஒளியாகும்
கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்து அதை இருளில் ஆன் செய்து பாருங்கள்
அதிவிரைவில் அதன் ஒளி
தூரத்தை நோக்கி பயணித்து விடும்
அதன் வேகத்தை முந்திச்செல்லவோ பின் தொடரவோ எந்த வாகனத்தை கொண்டு முயற்சி செய்தாலும்
ஒளி செல்லும் வேகத்தை நிச்சயம்
அடையவே முடியாது
காரணம் ஒளி என்பது
ஒரு நொடியில் 299,792 கிலோமீட்டர் தூரத்தை அடைந்துவிடும்
சுருங்க சொன்னால் ஒரு நொடியில் மூன்று இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தை ஒளியானது எட்டி விடும்
ஒரு நாளுக்கு 24 மணி நேரம் வருடத்திற்கு 365 நாட்கள் என்று சொன்னால் அதில் எத்தனை கோடிகள் நொடிகள் இருக்குமோ
அந்த நொடிகளை கூட்டி பார்த்து
ஒரு நொடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தை பெருக்கி பாருங்கள்
அதற்கான விடை எதுவோ
அத்தனை கோடி கிலோ மீட்டர் தூரத்தை ஒளியானது ஒரு வருடத்தில் கடந்திருக்கும்
இதை தான் ஒரு ஒளி ஆண்டு
என்று குறிப்பிடப்படுகிறது
ஒளி பல வகையில் உள்ளது
கண்ணுக்கு புலப்படும் ஒளி
கண்ணுக்கு தெரியாத ஒளி
கருவிகள் மூலம் காணப்படும் ஒளி
இதில் எல்லா ஒளியின் வேகமும்
ஒரே அளவில் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது
இதனால் தான் இறைவன் தன்னுடைய ஆற்றலை மனித சமுதாயத்திற்கு புரிய வைப்பதற்கு ஒளியை உருவாக்கிய இறைவன் என்றும் தன்னை திருமறையில் அறிமுகம் செய்கிறான்
அதாவது பிரபஞ்சத்தில் மனிதன் எப்படி ஒளியின் ஆற்றலை கூட
எந்த வகையிலும் வெல்லவோ நெருங்கவோ முடியாதோ
அதே போல் அந்த ஒளியை படைத்த இறைவனை யாரும் வெல்லவே இயலாது என்பதே அதன் கருத்து சுருக்கம்
அனைவரும் அந்த ஒளியை படைத்த ( இறைவனின்) சன்னதியில்
அடி பணிந்தே தீர வேண்டும் என்று புரிய வைக்கின்றான்
இப்படிப்பட்ட சர்வசக்தனாக
விளங்கும் இறைவனை
செதுக்கப்பட்ட சிலை வடிவமாக
வடிக்கப்பட்ட சமாதி வடிவமாக
மலம் ஜலம் சுமக்கும் மனித வடிவமாக
படைக்கப்பட்ட பொருள் வடிவமாக
நினைத்து வணங்குவதை விட பிரபஞ்சத்தில் வேறு மடமை இருக்கவே முடியாது
காண்பதை எல்லாம் கடவுளாக கருதும் ஆத்தீகனும்
கண்டு பிடிப்புக்கும் உருவாக்கத்திற்கும் வேறுபாடு
புரிய தெரியாத நாத்தீகனும்
விஞ்ஞானத்தில் மூளை
மழுங்கிய எவரும்
சிந்தனையில் கோளாறு ஏற்பட்ட ஜென்மங்களே
இறைவன் ஒப்பற்றவன்
எதற்கும் நிகரற்றவன்
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ نُوْرٌ عَلٰى نُوْرٍ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்)
அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும்
அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது
அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்
அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது
அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று மேல்திசையை சேர்ந்ததுமன்று அதனை நெருப்புத் தீண்டாவிடினும் அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும் (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும்
அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்
மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்
அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்
(அல்குர்ஆன் : 24:35)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment