பித்அத்துகள் தொடர ஆலீம்களே காரணமா

     பித்அத்துகள் தொடர ஆலீம்களே
                    மூல காரணமா 
            ♣♣♣♣♣♣♣♣♣♣
                 J .YASEEN IMTHADHI
                           *********

மார்க்கத்திற்கு முரணான ஒரு காரியம் நடைபெறுவதற்கு மூலமாக யார் செயல்படுகிறார்களோ  அவர்களே  
முதல் குற்றவாளிகள் 

அது ஆலீம்களானாலும் சரி
ஆலீம் அல்லாதவர்களானாலும் சரி 


பொதுவாக பித்அத்துகள் முளைப்பதற்கும் திளைப்பதற்கும் ஆலீம்களை மாத்திரம் மூல குற்றவாளியாக  சித்தரிக்கும் அவலம் பரவலாக காணப்படுகிறது 

இந்த குற்றச்சாட்டு பாமரமக்களிடம் எடுபடவும் செய்கிறது 

குற்றம் பெருகுவதற்கு மூல காரணிகளாக பெண்களே இருந்து கொண்டு பாதிப்பு ஏற்பட்ட பின்பு ஆடவர்களை மாத்திரம் அவ்விசயத்தில்  குற்றவாளிகளாக சித்தரித்து தப்பிப்பது போல் தான் இந்த குற்றச்சாட்டும் உள்ளது 

இந்த குற்றச்சாட்டு நூறு சதம் உண்மை என்று வைத்து கொண்டால் 

தற்காலத்தில் மக்களுக்கு மத்தியில் மார்க்க விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டு இருப்பதற்கு ஆலீம்கள் காரணமா அல்லது பொதுமக்களே திருந்தி கொண்டார்களா 

பள்ளிவாசல்களில் இளைஞர்களின் வருகை அதிகமாக இருப்பதற்கு ஆலீம்களின் அறிவுரைகள்  காரணமா அல்லது வேறு மக்களே காரணமா  

பித்அத் என்று சொன்னாலே 
அதை ஆலீம்கள் மட்டும் தான் உருவாக்கி இருப்பார்கள் என்ற கருத்தை  எங்கிருந்து எடுத்தீர்கள்   ?

தர்ஹாக்களில் தொப்பி ஜுப்பாக்களை அணிந்து கொண்டு பல வழிகேடுகளை ஊக்குவிக்கும் நபர்களில் எத்தனை நபர்கள் 
ஆலீம் பட்டம் பெற்றவர்கள் என்பதை சுட்டி காட்ட முடியுமா  ?

ஆலீம்களின் தோரணையில் அறிவீனர்களே அதிகம் சமூகத்தில்  பித்அத்துகளை வைத்து பிழைத்து  வருகிறார்கள் என்பதே உண்மை 

பித்அத்துகள் முளைப்பதற்கு ஆலீம்கள் காரணம் என்பதை ஒரு வகையில் ஏற்று கொண்டாலும் 
அந்த பித்அத்துகள் திளைப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகமும் மார்க்கத்தை அறிய முற்படாத பொதுமக்களின் பாராமுகமும் தான் மூல காரணம் என்பதே என் தனிப்பட்ட  குற்றச்சாட்டு

வரதட்சணை வாங்குவது மார்க்கம் என்று எந்த ஆலீம் மக்களுக்கு  ஆதாரங்களுடன் ஜும்மா மேடையில் முழங்கினார்


ஒரு ஆலீம் பணத்தை கிழித்து போடுங்கள் என்று சொல்லும் போது அதை அறிவோடு உரசி ஆலீமின் போதனை அறிவீனம் என்று முடிவு செய்யும் மக்கள் 
இது தான் மார்க்கம் என்று 
ஆலீம்  சொல்லும் போது மாத்திரம் குர்ஆன் சுன்னாவோடு ஒப்பிட்டு பார்ப்பதற்கு அக்கரை இல்லாது இருப்பது ஏன்?  தற்காலத்தில் அவ்வாறு ஒப்பிட்டு பார்ப்பதற்கு எது மக்களுக்கு  தடையாக  உள்ளது ?

ஆலீம்கள் சொல்லும் மார்க்க செய்திகளை எல்லாம் பள்ளிவாசல் நிர்வாகம் உடனே நடைமுறை படுத்துவது போல்  ஒரு பிம்பத்தை எதற்கு உருவாக்குகிறீர்கள் 

இதை பேச வேண்டும்
இதை பேச கூடாது
இதை இப்படி பேச வேண்டும்
என்று அவசியமற்ற  பல கட்டுப்பாடுகளை போட்டுள்ள பள்ளிவாசல் நிர்வாகத்தை நீங்கள் கேள்வி பட்டது இல்லையோ 



ஆலீம்களே பல தவறுகளை சுட்டி காட்டினாலும் பிற இயக்கங்கள் மீது கொண்ட வெறுப்புக்காக பித்அத்தை வீம்புக்காக  நடைமுறை படுத்துவது அதையும் மீறி ஆலீம் சுட்டிக்காட்டினால் ஆலீம் மீது தவறான முத்திரை குத்தி  நடவடிக்கை எடுப்பது என்ற போக்கை யாரும் அறியவில்லை என்று கருதுகிறீர்களா

பள்ளிவாசல் பணியில் இணைக்கும் போதே சம்பளம் குறைவாக இருந்தாலும் நம் ஜமாத்தில் கிம்பளம் அதிகம் வரும் என்று வழிகேடுகளுக்கு வித்திடுவது பள்ளிவாசல் நிர்வாகமா 
அல்லது ஆலீம்களே கிம்பளத்தை பற்றி விசாரிக்கிறார்களா  ? 



ஆலீம்களுக்கு மாத்திரம் இஸ்லாம் வரைமுறையை கற்று தரவில்லை
மாறாக பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் இறைவன் வரைமுறையை கற்று தந்துள்ளான் 

ஆலீம்களே மார்க்கத்திற்கு முரணாக பேசினாலும் அதை கண்டிக்கும் இடத்தில் தான் பள்ளிவாசல் நிர்வாகம் இருக்கின்றது என்பதை மூடி மறைக்க வேண்டாம்

இது வழிகேடுகளை தூக்கி பிடிக்கும் ஆலீம்களை ஆதரித்து எழுதிய பதிவு அல்ல அது தேவையும் இல்லை 

மாறாக வழிகேடுகள் தொடர்வதற்கு பின்னனியாக செயல்படும் காரணிகளையும் ஆலீம்களை மாத்திரமே குற்றவாளிகளாக சித்தரித்து தங்களை பரிசுத்த படுத்தி கொள்ளும் நபர்களையும் தாட்சண்யம் இன்றி விளக்குவதற்காக எழுதப்பட்ட பதிவு தான் இது

சத்தியத்தை உணர்ந்து ஆலீம்களின் எதார்தத்தை புரிந்து செயல்படும் பள்ளிவாசல் நிர்வாகமும் தற்போது உருவாகி வருகிறது என்பதையும் மறுக்கவில்லை 


اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களே இத்தகையவர்கள்  நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.

                 (அல்குர்ஆன் : 9:18)

مَا كَانَ لِلْمُشْرِكِيْنَ اَنْ يَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِيْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ بِالـكُفْرِ‌ اُولٰۤٮِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ  وَ فِى النَّارِ هُمْ خٰلِدُوْنَ‏

நிராகரிப்பின் மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும் முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை
அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன  அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்

                (அல்குர்ஆன் : 9:17)




                           நட்புடன்

            J . யாஸீன் (இம்தாதி)





Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்