முதல் கோணல்
முதல் கோணல்
•••••••••••
கட்டுரை எண் 1438
J . YASEEN IMTHADHI
**************
உணவுக்கு பதிலாக மண்
அல்லது பழக்கம் இல்லாத உணவை மனிதன் வாயில் போட்டால் நாவு அதை ஏற்காது
குடிநீருக்கு பதிலாக கழிவு நீரை குடிக்க முற்பட்டால் நாவு அதை தடுத்து விடும்
காரணம் இயற்கைக்கு எதிராக மனித இயல்புக்கு எதிராக எதை செய்தாலும் அதை துவக்கத்தில் வெறுக்கும் விதமாக தான் இறைவன் மனித உடல் அமைப்பை படைத்துள்ளான்
இதுவும் இறைவனின் மாபெறும் அருட் கொடைகளில் ஒன்று
இந்த அருட்கொடையை உணராது
மனிதனின் உடலும் மனமும் வெறுக்கும் செயல்களை செய்து தன்னை அடிமைபடுத்தி கொண்டவன் அதில் இருந்து மீளுவது வாழ்வில் மிகவும் சிரமம்
போதை பொருட்களுக்கு
ஒழுக்க கேடான செயல்களுக்கு அடிமை பட்டவனின் வாழ்வே இதற்கு சான்று
பணமும் வாலிபமும் இணைந்திருக்கும் சூழலில் இந்நிலைக்கு அடிமைபடும் மனிதனும் தீய நண்பர்கள் மூலம் இழுத்து செல்லப்படும் மனிதர்கள் மிகவும் அதிகம்
ஒரு முறை செய்து பார்ப்போம்
ஒரு முறை ருசித்து பார்ப்போம்
என்ற சிந்தனை எழும் போதே
அதை எட்டி மிதித்து செல்பவனே வருங்காலத்தில் அவனது துவக்க காலத்தை நினைத்து மிகவும் மகிழ்சியடைவான் ஆரோக்யத்தை பெறுவான்
اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்
அன்றியும், மானக்கேடான காரியங்கள் பாவங்கள் அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்
(அல்குர்ஆன் : 16:90)
اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ
மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது
என் இறைவன் அருள்புரிந்தாலன்றி
நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 12:53)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment