மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்
மாமனிதர் நபிகள் நாயகம்
அவர்களை
விமர்சித்தோரின் நிலை
****************
J . யாஸீன் இம்தாதி
---------------
இது படித்து விட்டு கடக்கும் பதிவு அல்ல பிற சமூகத்திற்கு அனுப்பும் பதிவு
••••••••••••••••••••••••••
கட்டுரை எண் 1437
**********
நபிகளாரை கடுமையாக இழிவு படுத்தியவர்கள் தங்கள் வாழ்நாளில்
ஒரு முறையேனும் அவரது ஆதாரப்பூர்வமான வாழ்கை வரலாற்றை நடுநிலையுடன் பார்வையிட்டால்
அவர்கள் அதுவரை அவரை இழிவு படுத்தியதை நினைத்து நிச்சயம் வருந்துவார்கள்
உடனே அதற்கு பரிகாரமாய் திருந்துவார்கள்
அல்லது அவர் வழியே தன் வழி
என மனம் மாறுவார்கள்
அல்லது அவர் கூறிய போதனைகளை பரப்பிட தன் வாழ்நாளையே முழுவதும் அர்ப்பனிப்பார்கள்
இது தான் நபியவர்கள் காலம் முதல் இன்று வரை நடந்து வரும் நிகழ்வுகள்
********************
( 1 ) உமர் (ரலி) அவர்கள்
இவர் நபியவர்களை கொலை செய்ய முன் வந்து இறுதியில் நபிகளாரின் கொள்கையை நிலைநாட்டும் பணியில் தன் உயிரை அர்ப்பனித்தவர்
( 2 ) சுராகா (ரலி) அவர்கள்
*********************
இவர் ஒரு நாள் பகல் முழுவதும் நபியவர்களை படுகொலை செய்ய பின் தொடர்ந்து வந்தவர்
அதே நாள் மாலை நபியவர்களை காக்கும் கேடயமாக மாறியவர்
( 3 ) அம்ரிப்னு ஆஸ் (ரலி)
******************
உலகில் ஒருவரை படுகொலை செய்யும் அளவு எனக்கு வேறு யார் மீதும் அந்தளவு கோபமில்லை என்று நபிகளாரை பற்றி குறிப்பிட்டவர்
அந்நிலையில் நான் மரணத்தை தழுவி இருந்தால் நிச்சயம் நான் நரகை அடைந்திருப்பேன் என்று பிற்காலத்தில் கண்ணீர் மல்க வருந்தினார்
( 4 ) சுமாமா ( ரலி)
******************
நபிகளாரை எதிர்த்த யமாமா நகர் பகைவர்களுக்கு தானியங்களை வழங்கி வந்தவர்
நபிகளாரின் அனுமதி இல்லாது என் புறத்தில் இருந்து ஒரு தானியம் கூட அனுப்ப மாட்டேன் என்று சொல்லி நபிகளாருக்கே உறுதுணையாக மாறியவர்
( 5 ) ஹிந்தா ( ரலி)
******************
பூமியின் மேல் பரப்பில் நான் வெறுக்கும் ஒரே முகம் என்று நபிகளாரிடமே சொன்னவர்
அவரது முகமே நான் உலகில் நேசிக்கும் முதல் முகம் என்று அன்பை வெளிப்படுத்திய பெண் மணி இவர்
இப்படியான வரலாறுகள் உலகில் நபிகளார் வாழ்கையில் தான் மிக அதிகம்
எதிரிகளையும் விமர்சிப்போரையும் கண்டு நபிகளார் துவண்டு விடவும் இல்லை
அதற்காக அவர்களை பழி வாங்க அவரை சார்ந்த மக்களை தூண்டி விடவும் இல்லை
காரணம் தன் அளவில் நபிகளார் யாரையும் அழைக்கவில்லை
மாறாக இறைவனின் கட்டளைக்கு செவிமடுக்கவே மக்களை அழைத்தார்
இறைனின் கட்டளைகளை ஏற்பதும் மறுப்பதும் ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை
அந்த உரிமையை கூட மதித்தவர்
மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல்)
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَ
மேலும், நாம் ( முஹம்மதே )
உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்
(அல்குர்ஆன் : 94:4)
நட்புடன் J . யாஸீன் இம்தாதி
Comments
Post a Comment