உள்ளத்தின் கசடுகள்
உள்ளத்தின் கசடுகள்
**************
ஜனிக்கும் எந்த உயிருக்கும் உணவு மற்றும் வாழ்விடத்தை இறைவனே தீர்மானித்த பின்னே படைத்திருக்கும் நிலையில்
இவ்விரெண்டை அடைவதற்கு தவறான பாதையும் தேவை இல்லை
பிறரின் நிலை கண்டு பொறாமையும் தேவை இல்லை
என்ற ஆழமான நம்பிக்கையோடு செயல்படுவதே இறைநம்பிக்கை உடையோரின் வாழ்கை முறையாகும்
எப்போது ஒரு மனிதனின்
உள்ளத்தில் பொறாமை குடி கொண்டு விட்டதோ அப்போதே அந்த மனிதனின் இறைநம்பிக்கை தளர துவங்கி விட்டது என்பதே பொருள்
ஆகையால் தான் பொறாமை எனும் குணத்தை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது
மேனியில் மெருகையும்
உடையில் தூய்மையும்
பொது நடையில் அழகையும்
பெற்றவன் உலக பார்வையில் ஈர்ப்புடையவனாக தோன்றலாம்
ஆனால் உள்ளத்தில் கசடுகளை
தூர கலைந்து விட்டு நீங்கியவனே மெய்யான இறைநம்பிக்கையாளன்
இறைவன் கொடுத்தும் சோதிப்பான்
கொடுத்ததை எடுத்தும் சோதிப்பான்
அறவே கொடுக்காதும் சோதிப்பான்
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா?
(அல்குர்ஆன் : 4:54)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment