Posts

Showing posts from June, 2022

சாக்கடையாக மாறிய சமூகவலைதளம்

              சாக்கடையாக மாறிய                     வலைதளங்கள்         ♦♦♦♦♦♦♦♦♦♦♦♦                  கட்டுரை எண் 1440                  J YASEEN IMDHATHI                           ********* மக்களுக்கு விரோதமாக நடக்கும்  ஆட்சியாளர்களை கண்டிக்கும்  பதிவுகளை  உண்மைக்கு எதிரான  செய்திகளை கண்டிக்கும் பதிவுகளை  பேஸ்புக் நிறுவனம் தங்களது  சட்டத்திற்கு எதிரானது என்று கட்டுப்பாடுகளை போட்டு பல விதங்களில் நேர்மையான பதிவுகளை முடக்கும் நிறுவனம் காமகளியாட்டங்களை  கீழ்த்தரமான காட்சிகளை  அருவெறுப்பான பதிவுகளை கண்டு கொள்வதே இல்லை  மக்களை ஒழுக்க கேடுகளின் பக்கம் இழுத்து சென்று அதன் மூலம் ஆன்லைன்  அடிமைகளாக்கி 24 மணி நேரமும் சிந்திக்க விடாது  சமூகவலைதளத்தில் முடங்க வைப்பது தான் பேஸ்புக்  நிறுவனத்தின் திட்டமோ என்று கருத தோணுகிறது  இதன் உச்ச கட்டமே             REELS AND SHORT VIDEOS கழிசடைகளின் குப்பை கூடாரமாகவும் சினிமா மனநோயாளிகளின் கேந்திரமாகவும் திகழ்கிறது  எதார்த்த வாழ்வை சிந்திக்காது இளம் வயதுடைய ஆண் பெண் அனைவரும்  தங்களை கதாநாயகனாக  கதாநாயகியாக கருதி கொண்டு எவனோ எழுதிய வார்த்தைக்கும் எவனோ நடித்த காட்ச

முதல் கோணல்

                     முதல் கோணல்                           •••••••••••                   கட்டுரை எண் 1438                   J . YASEEN IMTHADHI                        ************** உணவுக்கு பதிலாக மண்  அல்லது பழக்கம் இல்லாத உணவை மனிதன்  வாயில் போட்டால் நாவு அதை ஏற்காது  குடிநீருக்கு பதிலாக கழிவு நீரை குடிக்க முற்பட்டால் நாவு அதை தடுத்து விடும் காரணம் இயற்கைக்கு எதிராக மனித இயல்புக்கு எதிராக எதை செய்தாலும் அதை துவக்கத்தில் வெறுக்கும் விதமாக தான் இறைவன் மனித உடல் அமைப்பை படைத்துள்ளான் இதுவும் இறைவனின் மாபெறும் அருட் கொடைகளில் ஒன்று  இந்த அருட்கொடையை உணராது மனிதனின் உடலும் மனமும் வெறுக்கும் செயல்களை  செய்து தன்னை  அடிமைபடுத்தி கொண்டவன் அதில் இருந்து மீளுவது வாழ்வில் மிகவும் சிரமம்  போதை பொருட்களுக்கு  ஒழுக்க கேடான செயல்களுக்கு அடிமை பட்டவனின் வாழ்வே இதற்கு சான்று  பணமும் வாலிபமும் இணைந்திருக்கும் சூழலில் இந்நிலைக்கு அடிமைபடும் மனிதனும் தீய நண்பர்கள் மூலம்  இழுத்து செல்லப்படும்  மனிதர்கள் மிகவும்  அதிகம்  ஒரு முறை செய்து பார்ப்போம் ஒரு முறை ருசித்து பார்ப்போம் என்ற சிந்தனை எழும் போதே  அதை

மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்

       மாமனிதர் நபிகள் நாயகம்                           அவர்களை            விமர்சித்தோரின் நிலை                     ****************              J . யாஸீன் இம்தாதி                            --------------- இது படித்து விட்டு கடக்கும் பதிவு அல்ல பிற சமூகத்திற்கு அனுப்பும் பதிவு               ••••••••••••••••••••••••••                   கட்டுரை எண்  1437                       ********** நபிகளாரை கடுமையாக இழிவு படுத்தியவர்கள் தங்கள்  வாழ்நாளில் ஒரு முறையேனும் அவரது ஆதாரப்பூர்வமான வாழ்கை வரலாற்றை நடுநிலையுடன் பார்வையிட்டால்  அவர்கள் அதுவரை அவரை இழிவு படுத்தியதை நினைத்து நிச்சயம் வருந்துவார்கள்  உடனே அதற்கு பரிகாரமாய் திருந்துவார்கள் அல்லது அவர் வழியே தன் வழி  என மனம் மாறுவார்கள்  அல்லது அவர் கூறிய போதனைகளை பரப்பிட தன் வாழ்நாளையே முழுவதும்  அர்ப்பனிப்பார்கள்  இது தான் நபியவர்கள் காலம் முதல் இன்று வரை  நடந்து வரும் நிகழ்வுகள்                   ********************          ( 1 )  உமர் (ரலி) அவர்கள்  இவர் நபியவர்களை கொலை செய்ய முன் வந்து  இறுதியில் நபிகளாரின் கொள்கையை நிலைநாட்டும் பணியில் த

உள்ளத்தின் கசடுகள்

              உள்ளத்தின் கசடுகள்                       ************** ஜனிக்கும் எந்த உயிருக்கும் உணவு மற்றும் வாழ்விடத்தை இறைவனே தீர்மானித்த பின்னே படைத்திருக்கும் நிலையில்  இவ்விரெண்டை அடைவதற்கு தவறான பாதையும் தேவை இல்லை  பிறரின் நிலை கண்டு பொறாமையும் தேவை இல்லை  என்ற ஆழமான நம்பிக்கையோடு செயல்படுவதே இறைநம்பிக்கை உடையோரின் வாழ்கை முறையாகும்  எப்போது ஒரு மனிதனின்  உள்ளத்தில் பொறாமை குடி கொண்டு விட்டதோ அப்போதே அந்த மனிதனின் இறைநம்பிக்கை தளர துவங்கி விட்டது என்பதே பொருள்  ஆகையால் தான் பொறாமை எனும் குணத்தை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது  மேனியில் மெருகையும்  உடையில் தூய்மையும் பொது நடையில் அழகையும்  பெற்றவன் உலக பார்வையில் ஈர்ப்புடையவனாக தோன்றலாம்  ஆனால் உள்ளத்தில் கசடுகளை  தூர கலைந்து விட்டு நீங்கியவனே மெய்யான இறைநம்பிக்கையாளன்  இறைவன் கொடுத்தும் சோதிப்பான் கொடுத்ததை எடுத்தும் சோதிப்பான் அறவே கொடுக்காதும் சோதிப்பான் اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏ அல்லாஹ் த