இறையில்லங்களின் சாபம்

         இறையில்லங்களின் சாபம் 
                           நிச்சயம் 

                    *****************
              J . யாஸீன் இம்தாதி
                             ********

முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை இடிப்பதாக இருந்தாலும் அல்லது அநீதமாக பறிப்பதாக இருந்தாலும் நீதிமன்றங்களை நாடினால் போதும்
என்ற இழிநிலை தான் சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 

சொந்தமாக சம்பாரித்த பணத்தில் இருந்து கூட ரமழான் மாதத்தில் இறைவனின் கட்டளைக்கு இணங்க பகல் காலங்களில்  உண்ணுவதையே வெறுத்து பயிற்சி பெற்றுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு அடுத்தவர்களின் பொருளாதாரத்தால் எழுப்பப்பட்ட பிற  சமுதாயத்தின் வழிபாட்டுதளத்தை அபகரிக்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ எப்படி அனுமதி இருக்கும் ? ,அதை எப்படி முஸ்லிம் சமுதாயம் செய்வார்கள்  என்ற சாதாரண பகுத்துணர்வு கூட நீதிபதிகளுக்கு இல்லாதது வெட்க கேடாகும் 

நீதிமன்றங்களை இது போன்ற விசயங்களில் நம்புவது பயன் இல்லை என்ற எண்ணத்தை நெடுங்காலமாக நீதிபதிகளே விதைப்பது தான் விந்தையாக உள்ளது 

முகலாய மன்னர் பாபர் ராமருக்கு எழுப்பப்பட்ட கோயிலை இடிக்கவும் இல்லை அதற்கு சரியான ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பில் வாசித்து கொண்டே பாபர் மஸ்ஜிதை முஸ்லிம் சமூகத்திடம் இருந்து அபகரித்து கொடுத்த நீதிபதிகள் விரைவில் தனது தவறுக்கு இறைவனின் சந்நிதானத்தில் இழிவை சந்திப்பார்கள் 

நீதிபதிகளுக்கு மேல் ஒரு நீதிபதி ( இறைவன்) இருக்கிறான் என்பதை மறந்தவர்களாக வாழ்ந்து வரும் நீதிபதிகள் விரைவில் இறைவனின் பிடியில் சிக்குவார்கள் 

ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் சாபத்திற்கும் இறையில்லங்களின் பாவத்திற்கும் ஆளாவார்கள் இன்ஷா அல்லாஹ்  


اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ‏

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது

                 (அல்குர்ஆன் : 85:12)



وَكَذٰلِكَ نَجْزِىْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِاٰيٰتِ رَبِّهٖ‌ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى‏

ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்
மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்

             (அல்குர்ஆன் : 20:127)


              நட்புடன்  J . இம்தாதி



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்