வணங்க கடமை பட்ட மேயரே

             வணங்க கடமைபட்ட 
               மேயர்  அவர்களே 

                     ***************
             J . யாஸீன் இம்தாதி
                           *******
சக மனிதனை மனிதனாக
மனிதனில் புனிதனாக
மனிதனில் அறிவாளியாக
மனிதனில் பலம் வாய்ந்தவனாக
அடையாள குறியீடுகளுடன் குறிப்பிடுவது தவறு இல்லை 

வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே
என்று குறிப்பிடுவதற்கான தேவை என்ன ஏற்பட்டது  ?

படைப்பிற்குரியவனே வணக்கத்திற்கு உரியவன் என்பது 
பகுத்தறிவே கற்று தரும் பாடம் 

மனிதன் படைப்பிற்கு உரியவனா 
அல்லது அவனே படைப்புக்கு உட்பட்டவனா 

கடவுளை மறுப்பவனுக்கு
கடவுளை பற்றிய ஞானம் இல்லாதவனுக்கு 
கடவுளை பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவனுக்கு கடவுளுக்கு உரிய வணக்கம் என்ற சொல்லுக்கு உரிமை கொண்டாட   என்ன தகுதி உள்ளது


அதிகாரம் படைத்தோர் மக்களுக்கு இயன்ற வரை சேவை செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர
மக்களை கீழ்நிலையாக்கி தன்னை கடவுளுக்கு இணையாக போற்றப் படுவதை எதிர் நோக்கும் போலிச்சாமியார்களாக மாறி விட கூடாது 


கட்டிய மனைவியே
ஈன்றெடுத்த பிள்ளையே 
தன்னை வணங்க முன் வராத போது நாட்டு மக்களை தன்னை வணங்க சொல்லும் விதம் வாசகத்தை பயன்படுத்த கோரிக்கையை முன் வைக்கும்  அறிவீனத்தை கைவிட வேண்டும் 

வணக்கத்திற்குரிய மேயரே என்று அழைப்பதை விட 
வணங்க கடமை பட்ட மேயரே என்று குறிப்பிடுவது தான் சரியான வாசகம்

கல் மண் மரம் மாட்டுச்சாணம் ஆசிரியர் தாய் போன்ற படைப்பினங்களை வணங்கும் மக்களுக்கு இது சாதாரண விசயம்

உயிரை விட மேலாக கருதும் நபிகள் நாயகத்தை கூட 
வணக்கத்திற்குரிய நபிகளாரே 
என்று அழைப்பதை வெறுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு இது அனாவசியமான பாவமான விசயம் 


           நட்புடன்  J . இம்தாதி



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்