வீண் விவாதம்

    அவசியமற்ற தர்கங்களும்
     சூழ்நிலைகளை புரியாத
            அறிவீனர்களும்
                  ♦♦♦♦♦
            J . YASEEN IMTHADHI
            கட்டுரை எண் 1434
                      7-02-2022
                         *******

சமூகத்தில் எது முக்கியமோ அதை பற்றிய கருத்துக்களை மையப்படுத்துவதை தவிர்த்து விட்டு  அதை ஒட்டி முஸ்லிம் சமூகத்திடம் நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை விவாதிப்பது என்பது
நம்மை நாமே திசை திருப்பும் மடமையாகும்
இவ்வாறு திசைமாறி பூசல்கள் வளருவதை தான் எதிரிகளே எதிர் பார்கின்றனர்
அதற்கு ஏற்று சமூகத்தில் பலர் பலியாகி வருகின்றனர்

ஓட்டு யாருக்கு போடுவது ? என்பதை யோசிக்கும் நேரம் ஏன் ஒரே சமுதாயம் பல அணியில் நிற்கிறது  ? என்று  சமுதாய பிளவை பற்றி அந்நேரம்  விவாதிப்பதும் அர்த்தமற்றது
காரணம் அவ்வாறு விவாதிப்பவரும் ஒருவருக்கு தான் ஓட்டு போடுவாரே தவிர அவரும் சமுதாயமே முடிவு செய்யும் ஒருவரை கபடம் இல்லாது ஏற்கப்போவது இல்லை

கல்லூரி மாணவிகள் பர்தா அணிவதற்கு  தடை என்ற பிரச்சனையை  நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கும் நேரம்

பர்தா என்றால் என்ன தெரியுமா?
முகத்தை மூடுவது தான் பர்தா ?
இல்லை திறந்திருப்பதும் பர்தா ?
கருப்பு கலரில் இருப்பதே பர்தா ?
இல்லை எந்த கலரும் பர்தா ?
பர்தா அணிவதில் இந்த கோளாறு ?
ஆமாம் பர்தா அணிவதில் அதுவும்  கோளாரு ?

என்றெல்லாம் விவாதிப்பது
பதிவாளர்களின் பொது ஞானம் பக்குவம் அடையவில்லை என்பதை பகிரங்கமாக காட்டுகிறதே தவிர
இதில் அர்த்தமுள்ள எந்த அணுகுமுறையும் இல்லை

காரணம் இஸ்லாமிய எதிரிகள்  முஸ்லிம்களிடம் உள்ள பிரிவை பற்றியோ பிளவுகளை பற்றியோ கருத்து வேறுபாடுகளை பற்றியோ சர்ச்சை செய்து கொண்டிருக்கவில்லை
அவர்களின் ஒரே பார்வை
முஸ்லிம் இஸ்லாம் என்பது மட்டும் தான்

சுருக்கமாக சொன்னால்

கல்யாண வீட்டுக்கு போனா வாழ்த்து சொல்லுவோம்
கருமாரி வீட்டுக்கு போனா ஆறுதல் சொல்லுவோம்

இது தான் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் நடைமுறை அறிவை சார்ந்த வழிமுறை

قُلْ اَ تُحَآجُّوْنَـنَا فِى اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّکُمْ وَلَنَآ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْ وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَۙ‏

அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான் எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு
உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்” என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக

          (அல்குர்ஆன் : 2:139)

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்