உள்ளாட்சி வெற்றியாளர்கள்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி
பெற்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்கு
♣♣♣♣♣
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1435
22-02-2022
*******
உள்ளாட்சி தேர்தலில் அரிதான சில வெற்றிகளை கூட முஸ்லிம் சமூகம் பெரிதாக பாராட்டுகிறார்கள் என்றால்
அதற்கான வெற்றியாளர்கள் இனி தான் தங்களுடைய விசுவாசத்தை அதன் பணிகள் மூலம் செயல்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும்
அரசியல் என்றாலே கூட்டுக்களவாணிகள் என்ற எண்ணமே நாட்டு மக்களுக்கு மேலோங்கி உள்ளது
அந்த கூட்டுக்குள் தான் நீங்களும் தற்போது அடி எடுத்து வைத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர்கள்
அதே விமர்சனத்திற்கு உரியவர்களாக நீங்களும் மாறி விடாதீர்கள்
காரணம் இதுவரை பாராளுமன்றம் சட்ட மன்றத்தில் அங்கம் பெற்றவர்கள் கூட இதுவரை முஸ்லிம் சமுதாயம் ஒட்டு மொத்தமாக பாராட்டும் அளவு தனித்துவ பட்டயம் பெறவில்லை
அதற்கு காரணம் ஈமான்தாரிகளின் பட்டறையாக இந்திய அரசியல் கூடாரங்கள் இல்லை
கடவுள் மறுப்பாளர்களாக இணை வைப்பாளர்களாக பிழைப்பதற்கு வருகை தந்தவர்களாக லஞ்சம் வாங்குபவர்களாகவே அடாவடியில் ஈடுபடுபவர்களாகவே பவனி வந்துள்ளனர்
அதனால் தான் இஸ்லாமும் கூட பதவியை கேட்டு பெறாதீர்கள் என்று முழக்கமிடுகிறது
அந்த முழக்கத்திற்கு மாற்றமாக இந்திய அரசியல் சூழ்நிலை இருக்கும் நிர்பந்தத்தில் தான் நீங்களும் பதவிகளில் தற்போது நுழைந்துள்ளீர்கள்
இதை கவனத்தில் கொண்டு செயல் பட முயற்சி செய்யுங்கள் என்ற ஆதங்கத்துடன் நிறைவு செய்கிறேன்
******
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا
அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு அபூதர்ரே! நீர் பலவீனமானவர் அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள்
நூல்: புகாரி-3729
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلاَنِ مِنْ قَوْمِي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: أَمِّرْنَا يَا رَسُولَ اللَّهِ، وَقَالَ الآخَرُ مِثْلَهُ، فَقَالَ: «إِنَّا لاَ نُوَلِّي هَذَا مَنْ سَأَلَهُ، وَلاَ مَنْ حَرَصَ عَلَيْهِ
நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள்
ஆதாரம்: புகாரி-7149
مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ
ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி-7150
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment