மடமை வாதம்
மார்க்கத்தை பறைசாற்ற
மடமையை கையாளாதீர்
÷÷÷ ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
J . யாஸீன் இம்தாதி
*********
மார்க்க ரீதியாக ஒரு நபருக்கு அல்லது இயக்கத்துக்கு மறுப்பு பதிக்க முனைவோர்
வெளிப்படும் கருத்தை மையமாக வைத்து மறுப்பு சொல்ல முயற்சிப்பது தான் சரியான அணுகுமுறை
அதை தவிர்த்து விட்டு வெறுப்பை மையமாக வைத்து மறுப்பு சொல்ல துவங்கினால் சத்தியத்தை சரியான முறையில் பிறருக்கு புரிய வைக்க இயலாது
பல விடயங்களில் சரியான புரிதலின் பக்கம் மக்கள் செல்லாது தவிப்பதற்கு இது தான் மூல காரணம்
சமூகவலைதளங்களில் அநேகரின் அணுகுமுறை
இதே தோரணையை தான் பிரதிபலிக்கிறது
குறிப்பாக சலபுகளை பற்றி கருத்துக்களை பரிமாறும் இரு சாராரில் அநேகர் இதே வழிமுறையில் பயணிப்பது அவர்களிடம் குடிகொண்டிருக்கும் அநாகரீகத்தையும் அருவருப்பையும் தருகிறது
மார்க்கத்திற்காக குரல் கொடுப்போர் அவர்களை அறிந்தும் அறியாதும் சாத்தானின் வலையில் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது
சலபு என்ற வார்த்தைக்கே வழிகேடர் என்ற போலியான சித்திரத்தை தருவதும்
சலபுகளை தவிர வேறு எவரும் ஆய்வே செய்ய இயலாது என்ற தோரணையில் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் வரம்பு மீறும் செயல்
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக
இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக
மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டு தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்
(அல்குர்ஆன் : 16:125)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment