கொள்கை தடுமாற்றம் ஏன்
கொள்கை தடுமாற்ற பின்னனி ♦♦♦♦♦ J . YASEEN IMTHADHI கட்டுரை எண் 1433 30-01--2022 ******* ஒரு காலத்தில் சத்தியத்தை நிலை நாட்ட கடுமையாக தன்னை தியாகம் செய்த சிலர் திடீரென பிற மக்களே வேதனை படும் விதம் அவரே அதுவரை எதிர்த்த கொள்கையை நோக்கி பயணிப்பதின் காரணம் என்ன பணமே என்பது அவரது தடுமாற்றத்திற்கு பிறர் கற்பிக்கும் பொதுவான குற்றச்சாட்டு இது பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாமே தவிர இதுவே மூல காரணம் என்று அனைவருக்கும் சொல்லி விட முடியாது யாருடன் இணைந்து கொள்கை முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்தாரோ அவர்களில் சிலர் இவரது வாழ்கை முன்னேற்றத்திற்கு இடையூராக இருந்திருக்க கூடும் சத்தியத்திற்கு குரல் கொடுப்பதுடன் இவர்களுடன் இணைந்திருந்த...