இஸ்லாத்தை ஏற்போரை சலிக்க வைக்காதீர்

   இஸ்லாத்தை ஏற்போரை
          சலிக்க வைக்காதீர்

                  ♦♦♦♦♦
            J . YASEEN IMTHADHI
            கட்டுரை எண் 1430
                      28-11-2021
                         *******
மாற்று சமூகத்தில் இருந்து ஒருவர் இஸ்லாத்தை தழுவினால் அல்லது இஸ்லாத்தின் சிறப்பை பற்றி பேசினால் அவர் தனது ஈமானை வெளிப்படுத்தாத வரை அவரது ஈமானை பிறர் அறிய  விளம்பரம் செய்வது அவசியமற்றது 

காரணம் ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்பதால் பல வித இடையூறுகளை சந்திக்க நேரிடும் 

அதன் காரணத்தால் தனது ஈமானை வெளிரங்கத்தில் காட்டாது பலர் இன்றும் மறைமுக ஈமானுடன்  வாழ்ந்து வருகின்றனர்

இம்முறையில் ஈமானை மறைத்து வாழ்வது  மார்க்கத்திலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதை உணராதவர்களாக 
பல பரப்பரை முஸ்லிகள் இருப்பதை பரவலாக காணுகிறோம் 
காரணம் இஸ்லாத்தில் அங்கம் வகிப்பதால் இவர்கள் சிரமங்களை அனுபவித்தது இல்லை தியாகங்களை செய்தது இல்லை 

குறிப்பாக சமூகவலைதளத்தில் மறைமுகமாக இஸ்லாத்தை தழுவியவர்களை அவர்களின் அனுமதியின்றி அடையாளம் காட்டி அதன் மூலம் லைக்குகளை பெற்று ஆனந்தம் அடையும் பல மனநோயாளிகள் உள்ளனர் 

இது போன்றோரின் அறிவீன அறிக்கைகளால் பல இடையூறுகளை புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் சந்தித்து வருகின்றனர் தனிப்பட்டு வருத்தங்களை வெளிப்படுத்தியும் வருகின்றனர் 



குறிப்பாக சில முஸ்லிம் இயக்கங்கள் இது போன்றோரை மேடை ஏற்றி அதன் மூலம் தனது இயக்கத்திற்கும் தனி மனிதனுக்கும் புகழ் சேர்க்க விரும்புகின்றனர் 

இத்தகையவர்களை கண்டிப்பது அவசியமானது 

பிறருக்கு தனிப்பட்டு இஸ்லாத்தை எத்தி வைக்காவிட்டாலும் பரவாயில்லை

ஈமானை வெளிப்படுத்த விரும்பாதவர்களின் வாழ்கைக்கு இடையூராக இருக்காதீர்கள் 


وَاِنَّ رَبَّكَ لَيَـعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ‏

மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்

          (அல்குர்ஆன் : 27:74)

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّ بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ‌ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது
அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர 
(எனவே அவர் ஈமானை மறைத்திருப்பது  குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ  இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்
 இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு

       (அல்குர்ஆன் : 16:106)


       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்