மன அமைதிக்கு மறுவடிவம் மனைவி
மன அமைதிக்கு
மறு வடிவம் மனைவி
♦♦♦♦♦
J . YASEEN IMTHADHI
கட்டுரை எண் 1429
28-11-2021
*******
ஆண் மகன் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு தரும் முக்கியதுவத்தை மனைவியர் விசயத்தில் தருவது இல்லை
அநேகமானோர் மனைவிக்கு செய்யும் காரியங்களை கடமையாகவே கருதுவதும் இல்லை மாறாக அதை மனைவிக்கு செய்யும் சேவையாக தியாகமாக தர்மமாகவே கருதுகிறான்
சேவைகளை செய்யாவிட்டால் மறுமையில் தண்டனை இல்லை
ஆனால் மனைவியருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் குறை வைத்தால் கூட மறுமையில் நிச்சயம் கேள்வியும் உண்டு தண்டனையும் உண்டு
தாயை காரணம் காட்டி மனைவியை புறம் தள்ளுவதும் மனைவியை காரணம் காட்டி தாயை புறம் தள்ளுவதும் மறுமை கேள்விகளுக்கு சுலபமாக வழி வகுக்கும்
ஒரு ஆடவனை பொருத்தவரை தாயின் அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நிச்சயம் மனைவியே
தாய் நினைத்தாலும் சில காரியங்களை மகனுக்கு செய்ய இயலாது
ஆனால் மனைவி நினைத்தால் மட்டுமே அக்காரியங்களை கடமையாக அருவருப்பு இன்றி செய்ய இயலும்
செய்து கொண்டும் உள்ளனர்
ஆதலால் தான் மனைவியை இறைவன் (நிஃமத்) அருட்கொடை என்று சொல்கிறான்
وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான் உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும் பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான் அப்படியிருந்தும் (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?
(அல்குர்ஆன் : 16:72)
உடலியலை உளவியலை எதார்த்த நடைமுறையை உள்வாங்கி வாழ்வை கடந்து செல்லும் எந்த கணவனும் மனைவியை முற்றிலும் வெறுப்பது இல்லை
எந்த மனைவியும் கணவனை முற்றிலும் வெறுப்பதும் இல்லை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment