சவுதி அரசும் தப்லீக் ஜமாத்தும்

               தப்லீக் தடையும்
              சவுதி மன்னரும்
            ♦♦♦♦♦♦♦
            J . YASEEN IMTHADHI       
                    20-12-2021
                         *******
ஒரு நாட்டில் செயல்படும் இயக்கத்தை அரசு நினைத்தால் தடை செய்யலாம் 

ஆனால் தடை செய்வதற்கு பொருத்தமான  ஆதாரப்பூர்வமான காரணங்களை சான்றை வெளியிட வேண்டும் 


குர்ஆன் ஹதீசுக்கு எதிரான அமைப்பு என்பதற்காக சவுதியில் தப்லீக் ஜமாத்துக்கு  தடை என்பது உண்மையெனில் குர்ஆன் ஹதீசுக்கு எதிரான பல நடவடிக்கைகளை ஒழுக்க கேடுகளை சவுதி மன்னரே அரங்கேற்றம் செய்து தான் வருகிறார் அவருக்கு என்ன தடை  ? 

தீவிரவாதிகள் என்பதற்காக தப்லீக் ஜமாத்துக்கு தடை என்பது உண்மை என்றால் இதுவரை தப்லீக் ஜமாத் எத்தனை தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அதிகாரபூர்வமாக சவுதி  வெளியிட வேண்டும் 

அவ்வாறு வெளியிட முன் வராத பட்சத்தில் தப்லீக் ஜமாத்தை தீவிரவாதம் என்ற காரணத்தை சொல்லி விமர்சிப்பது அறிவீனமானது அநீதமானது
இவ்வாறு பேசுவோர் எந்த ஆலீமாக இருந்தாலும் அவர் சவுதியின் பணத்திற்காக சிங்கடி அடிப்பவராக மட்டுமே இருப்பார் 

இதை தாஃயீக்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் பணியாற்றும் பல நாட்டு உலமாக்கள் அங்கிருந்தே முழங்கி வீடியோ பதிவுகளை வெளியிட முன் வருவார்களா  ?


வானத்திற்கு மேல் உள்ளதையும் பூமிக்கு கீழ் உள்ளதையும் ( சொர்கம் மண்றையை தவிர ) வேறு எதையும்  தப்லீக் ஜமாத்தினர்கள் பேசமாட்டார்கள் 
( அதாவது உலகில் எது நடந்தாலும் அதை கண்டு கொள்ளாதவர்கள் கோழைகள் என்று ) இந்தியாவில்  தப்லீக் ஜமாத்திற்கு ஒரு பட்டம் உண்டு

இதை உண்மை என்று கருதினால்  சவுதியின் தடை அறிவீனமானது 
இதை பொய் என்று வாதிட்டால் சவுதியின் தடை நீதியானது 

இதில் எதை நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்  ?

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தே காரணம் என்று  புரளியை பரப்பிய காவி கயவர்களுக்கும் சவுதி அரசுக்கும் எந்த வேறுபாடும் இவ்விசயத்தில் இல்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து 



முடிவு உங்கள் வசமே ஒப்படைக்கிறேன் 


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌  اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

இறைநம்பிக்கை கொண்டவர்களே! 
நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள்
 இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள்
நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்

         (அல்குர்ஆன் : 5:8)




       நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்