தீய குணத்தின் தலைவன்
தீய குணத்தின் தலைவன்
***********
J .YASEEN IMTHADHI
********
ஒரு நல்ல காரியம்
யார் மூலம் நடந்தாலும் சரி
எந்த முறையில் நடந்தாலும் சரி
அதற்கு நாம் ஒத்துழைப்பு தருவோம் அல்லது ஒதுங்கி நின்று வாழ்த்துவோம் என்ற மனபக்குவம் இருந்தாலே உலகில் எந்த காரியமும் சீராக நடைபெறும்
எப்போது ஒரு மனிதனின் உள்ளத்தில் பதவி மோகமும் தன்னை முன்னிலை படுத்தும் சிந்தனையும் மேலோங்கி நிற்கிறதோ அப்போதே அந்த காரியம் பல இடையூறுகளை அவனால் எதிர் கொள்ளும் பகைமை உணர்வை அதிகரிக்கும்
இது குடும்ப அமைப்பிலும் சரி
சமுதாய அமைப்பிலும் சரி
நிர்வாக அமைப்பிலும் சரி
தீய குணங்களில் தலையான குணம் பதவி மோகம்
தேடி வந்த பதவிகளை கூட உதறி தள்ளியவர்கள் நல்லோர்கள்
உதவிகளை செய்ய பதவிகள் தேவை இல்லை என்பதே நல்லோர்களின் வழிமுறை
பணம் பத்தும் செய்யும்
பதவி மோகம் எதையும் செய்ய துணியும் என்பதே சான்றோர்களின் அறவுரை
அவ்வழியில் நின்று நாமும் நல்ல காரியங்களுக்கு இயன்றவ ஒத்துழைப்பு தருவோம்
அல்லது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்போம்
இன்ஷா அல்லாஹ்
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ
அந்த மறுமையின் வீட்டை இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும் குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்
ஏன் என்றால் பயபக்தி உடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு
(அல்குர்ஆன் : 28:83)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment