நவமுஸ்லிம்களும் பரம்பரை முஸ்லிம்களும்

          நவ முஸ்லிம்களும் 
   பரம்பரை முஸ்லிம்களும்

                     ++++++++++
      Bismillahir Rahmanir Raheem
                      ********
இஸ்லாத்தின் மகிமையை தனிச்சிறப்பை புதிதாக இஸ்லாத்தில் நுழைந்தவர்கள் அறிந்து வைத்துள்ள அளவு பரம்பரை முஸ்லிம்கள் என்று பெருமைபடும் முஸ்லிம்களில் பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை 

எந்த ஒன்றை தியாகம் செய்த நிலையில் அடைகின்றோமோ அந்த ஒன்றை தான் உளப்பூர்வமாக நாம் மதிப்போம் பாதுகாப்போம் பின்பற்ற முயற்சிப்போம்

அந்நிலை தற்கால பரம்பரை  முஸ்லிம்கள் அடையாத காரணத்தால் தான் முஸ்லிம் அல்லாதவர்களின் மார்க்க உரையை கண்டு ஆச்சரிய படுகின்றனர் 

மெடிக்கல் சென்டரில் அடுக்கி வைக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் நுகர்வோருக்கு தான் அதிகம் பயன்தரும் 
மருந்துகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அதிகம் பயன்தராது என்பதை போல் தான் 

திருக்குர்ஆன் முஸ்லிம்களின் இல்லத்தில் உள்ளது 
திருக்குர்ஆனின் போதனைகள் புதிதாக இஸ்லாத்தை தழுவும் சகோதர சகோதரிகளின் உள்ளத்தில் இருக்கின்றது 

இதை உணராது மறுமை வெற்றியை எதிர்பார்ப்பது கானல் நீருக்கு ஒப்பானது

புதிதாக இஸ்லாத்தை தழுவிய நவமுஸ்லிம்களின் 

   என்னை கவர்ந்த இஸ்லாம்

நிகழ்சிகளை அதிகம் பாருங்கள் பரப்புங்கள் 

        நட்புடன் J . இம்தாதி

 

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்