சுபுஹான மவ்லிது
சுபுஹான மவ்லிது
++++++++++
Bismillahir Rahmanir Raheem
********
கட்டுரை எண் 1424
*********
மறுமை நன்மையை நாடி செய்யப்படும் எந்த வழிபாடும் இபாதத் என்ற வணக்க முறையை சார்ந்ததாகும்
இபாதத் என்பது ஒரு மனிதனின் அறிவை வைத்து அல்லது அறிவியலை வைத்து உருவாக்கப்படுவது இல்லை
மாறாக இறை வசன சான்றுகளை வைத்தும் ஆதாரப்பர்வமான நபிமொழி போதனைகளை வைத்தும் முடிவு செய்ய வேண்டிய செய்தி(ஹதீஸ்) களாகும்
ரபியுலவ்வல் மாதத்தில் பக்தியுடன் ஓதப்பட்டு வருகின்ற சுபுஹான மவ்லிது என்ற அரபு பாடல் வரிகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட குர்ஆனிலும் இல்லை
நபி ( ஸல் ) அவர்களும் கற்றுதரவில்லை
நபி (ஸல் )அவர்கள் காலத்திலும் இல்லை
நபிகளாரை உயிரை விட அதிகம் நேசித்த சஹாபாக்களும் ஓதியதும் இல்லை ஏன் சுபுஹான மவ்லிது என்ற பாடல் வரிகளை சஹாபாக்கள் பார்த்ததும் இல்லை
நான்கு மத்ஹப் இமாம்களும் ஓதியது இல்லை
அவர்கள் பெயரால் எழுதப்பட்ட மத்ஹப் நூல்களிலும் சுபுஹான மவ்லிது பற்றிய குறிப்புகள் இல்லை
சுபுஹான மவ்லிது என்ற பாடல்களை படிப்பது பர்ளு என்று எந்த இமாம்களும் சொன்னதும் இல்லை
சுபுஹான மவ்லிது என்ற பாடலை படிக்காவிட்டால் நரகம் கிடைக்கும் என்று எவரும் வாதிக்கவும் இல்லை
சுபுஹான மவ்லிது எந்த காலத்தில் எழுதப்பட்டது ? என்பதற்கு வரலாற்று குறிப்பும் இல்லை
சுபுஹான மவ்லிது என்ற அரபு பாடல் புத்தகத்தை யார் எழுதியது ?என்ற எந்த சான்றும் இல்லை
அதை யார் தொகுத்தது ? என்ற எந்த விபரமும் இல்லை
அப்படிப்பட்ட சுபுஹான மவ்லிது என்ற அரபு பாடல்களை படிப்பது மார்க்கம் என்று ஒரு முஃமீன் கருதினால் அவரது மார்க்க அறிவீனத்தை நினைத்து தான் கவலைப்பட வேண்டும்
நபிகளாரை புகழ்வது என்பது அவர்கள் மனித சமூகத்திற்கு கற்று தந்த
சொல்
செயல்
அங்கீகாரங்களை இயன்றவரை அறிந்து அதை வாழ்வில் நடைமுறை படுத்துவதில் தான் உள்ளது
இதற்கு மேல் சுபுஹான மவ்லிது பற்றி விளக்கிட எந்த அவசியமும் இல்லை
اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ
(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை
இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்
(அல்குர்ஆன் : 6:106)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment