Posts

Showing posts from October, 2021

தீய குணத்தின் தலைவன்

     தீய குணத்தின் தலைவன்                      ***********              J .YASEEN IMTHADHI                         ******** ஒரு நல்ல காரியம்  யார் மூலம் நடந்தாலும் சரி  எந்த முறையில் நடந்தாலும் சரி அதற்கு நாம் ஒத்துழைப்பு தருவோம் அல்லது ஒதுங்கி நின்று வாழ்த்துவோம் என்ற மனபக்குவம் இருந்தாலே உலகில்  எந்த காரியமும் சீராக நடைபெறும் எப்போது ஒரு மனிதனின் உள்ளத்தில் பதவி மோகமும் தன்னை முன்னிலை படுத்தும் சிந்தனையும் மேலோங்கி நிற்கிறதோ அப்போதே அந்த காரியம் பல இடையூறுகளை அவனால்  எதிர் கொள்ளும் பகைமை உணர்வை  அதிகரிக்கும்  இது குடும்ப அமைப்பிலும் சரி சமுதாய அமைப்பிலும் சரி  நிர்வாக அமைப்பிலும் சரி  தீய குணங்களில் தலையான குணம் பதவி மோகம்  தேடி வந்த  பதவிகளை கூட உதறி தள்ளியவர்கள் நல்லோர்கள்  உதவிகளை செய்ய பதவிகள் தேவை இல்லை என்பதே நல்லோர்களின் வழிமுறை  பணம் பத்தும் செய்யும் பதவி மோகம் எதையும் செய்ய துணியும் என்பதே சான்றோர்களின் அறவுரை  அவ்வழியில் நின்று நாமும் நல்ல காரியங்களுக்கு இயன்றவ  ஒத்துழைப்பு தருவோம் அல்லது ஒதுங்கி நின்று  வேடிக்கை பார்ப்போம்  இன்ஷா அல்லாஹ் تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَل

சுபுஹான மவ்லித் என் பார்வை

      சுபுஹான மவ்லித் பற்றி                எனது பார்வை                       ++++++++++       Bismillahir Rahmanir Raheem                       ********             கட்டுரை எண் 1425                      ********* மார்க்கத்தின் பெயரால் ஒரு மனிதன் தவறான ஒன்றை நடைமுறை படுத்துகிறான் என்றால்  1 அறியாமை 2 தவறான புரிதல் தமிழகத்தில் தற்போது பள்ளிவாசல்களில்  நடை பெற்று வரும் அரபு பாடல் சுபுஹான மவ்லித் என்பது இந்த இரு காரணங்களுக்காக அதிகம் நடைபெறுவது இல்லை காரணம் அந்தளவுக்கு சுபுஹான மவ்லிதின்  அபத்தங்கள் குர்ஆன் ஹதீசுக்கு எதிரான கருத்துக்கள் முரண்பாடுகள் கட்டுக்கதைகள் தெளிவாக பாமரர்களே உணரும் விதம்  விளக்கப்பட்டு விட்டது  சமூகவலைதளங்கள் மூலமாக சுபுஹான மவ்லிதுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கட்டுரைகள் விவாதங்கள் தமிழ் மொழியில்  பரவலாக்கப்பட்டு விட்டது  புதிதாக இஸ்லாத்தில் நுழையும் எவரும் சுபுஹான மவ்லித் பாடலை  படித்து இஸ்லாத்தில் வருவதும் இல்லை  சுபுஹான மவ்லித் என்பது மார்க்கம் என்று  அவர்களே  கருதுவதும் இல்லை  ஆனால் பல பரம்பரை  முஸ்லிம்கள் சுபுஹான மவ்லித் என்ற அரபு பாடலை தூக்கி பிடித்து சுற்றுகின்றனர்

நவமுஸ்லிம்களும் பரம்பரை முஸ்லிம்களும்

          நவ முஸ்லிம்களும்     பரம்பரை முஸ்லிம்களும்                      ++++++++++       Bismillahir Rahmanir Raheem                       ******** இஸ்லாத்தின் மகிமையை தனிச்சிறப்பை புதிதாக இஸ்லாத்தில் நுழைந்தவர்கள் அறிந்து வைத்துள்ள அளவு பரம்பரை முஸ்லிம்கள் என்று பெருமைபடும் முஸ்லிம்களில் பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை  எந்த ஒன்றை தியாகம் செய்த நிலையில் அடைகின்றோமோ அந்த ஒன்றை தான் உளப்பூர்வமாக நாம் மதிப்போம் பாதுகாப்போம் பின்பற்ற முயற்சிப்போம் அந்நிலை தற்கால பரம்பரை  முஸ்லிம்கள் அடையாத காரணத்தால் தான் முஸ்லிம் அல்லாதவர்களின் மார்க்க உரையை கண்டு ஆச்சரிய படுகின்றனர்  மெடிக்கல் சென்டரில் அடுக்கி வைக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் நுகர்வோருக்கு தான் அதிகம் பயன்தரும்  மருந்துகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அதிகம் பயன்தராது என்பதை போல் தான்  திருக்குர்ஆன் முஸ்லிம்களின் இல்லத்தில் உள்ளது  திருக்குர்ஆனின் போதனைகள் புதிதாக இஸ்லாத்தை தழுவும் சகோதர சகோதரிகளின் உள்ளத்தில் இருக்கின்றது  இதை உணராது மறுமை வெற்றியை எதிர்பார்ப்பது கானல் நீருக்கு ஒப்பானது புதிதாக இஸ்லாத்தை தழுவிய நவமுஸ்லிம

சுபுஹான மவ்லிது

          சுபுஹான மவ்லிது                         ++++++++++       Bismillahir Rahmanir Raheem                       ********             கட்டுரை எண் 1424                      ********* மறுமை நன்மையை நாடி செய்யப்படும் எந்த வழிபாடும் இபாதத் என்ற வணக்க முறையை சார்ந்ததாகும் இபாதத் என்பது ஒரு மனிதனின் அறிவை வைத்து அல்லது அறிவியலை வைத்து உருவாக்கப்படுவது இல்லை மாறாக இறை வசன சான்றுகளை வைத்தும் ஆதாரப்பர்வமான நபிமொழி போதனைகளை வைத்தும் முடிவு செய்ய வேண்டிய செய்தி(ஹதீஸ்) களாகும்  ரபியுலவ்வல் மாதத்தில் பக்தியுடன் ஓதப்பட்டு வருகின்ற சுபுஹான மவ்லிது என்ற அரபு பாடல் வரிகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட  குர்ஆனிலும் இல்லை  நபி ( ஸல் ) அவர்களும்  கற்றுதரவில்லை  நபி (ஸல் )அவர்கள் காலத்திலும் இல்லை நபிகளாரை உயிரை விட அதிகம் நேசித்த சஹாபாக்களும் ஓதியதும்  இல்லை ஏன்  சுபுஹான மவ்லிது என்ற பாடல் வரிகளை சஹாபாக்கள்  பார்த்ததும்  இல்லை நான்கு மத்ஹப் இமாம்களும் ஓதியது இல்லை  அவர்கள் பெயரால் எழுதப்பட்ட மத்ஹப் நூல்களிலும் சுபுஹான மவ்லிது பற்றிய குறிப்புகள் இல்லை  சுபுஹான மவ்லிது என்ற பாடல்களை படிப்பது