இது தான் வாழ்கை
இது தான் வாழ்கை
++++++++++
Bismillahir Rahmanir Raheem
********
கட்டுரை எண் 1421
*********
போட்டியும் பொறாமையும்
பழி வாங்கும் எண்ணமும்
ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து விட்டால் அவன் எடுக்கும் அறீவீன முடிவை அவன் செல்லும் தவறான பாதையை மெருகூட்டி காட்டுவதே சாத்தானின் முதல் வேலை
இதன் மூலம் நற்பெயரை சாகடித்து நல்லறங்களை பாழாக்கி நல்லுறவுகளை துண்டிக்க வைத்து அதனால் ஏற்படும் குரோதங்களை விரோதங்களை பெரிதாக்கி வேடிக்கை பார்த்து ஆனந்தம் அடைவதே சாத்தானின் இலட்சியம்
மண்ணறைக்கு செல்லும் போது நமக்காக மனம் உருகி இறைவனிடம் தனிமையில் பிராத்தணை செய்யும் நான்கு நபர்களை உருவாக்கி விட்டு செல்வது தான் மெய்யான வாழ்கை
இவன் வாழ்வதை விட வீழ்வதும் அடிபட்டு சாவதும் சரி என்று நம்மை பற்றி பிறர் மனதில் நினைத்தால் அதுவே தீய மனிதனின் வாழ்கை
நம்மை காணும் போது ஆனந்தத்துடன் பிறர்கள் புன்னகைப்பது கூட நாம் உலக வாழ்வில் ஈட்டி கொள்ளும் சொத்தாகும்
நம்மை கண்டாலே பிறர் பயந்து அல்லது வெறுப்பால் நம்மை விட்டு விலகி செல்லும் சூழலை ஏற்படுத்தி கொண்டால் அதுவே நம்மை நாமே ஏற்படுத்தி கொள்ளும் இழிவு
عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ اْلاَنْصَارِيِّ ؓ قَالَ: سَاَلْتُ رَسُوْلَ اللهِ ﷺ عَنِ الْبِرِّ وَاْلاِثْمِ؟ فَقَالَ: اَلْبِرُّ حُسْنُ الْخُلْقِ، وَاْلاِثْمُ مَاحَاكَ فِيْ صَدْرِكَ وَكَرِهْتَ اَنْ يَّطَّلِعَ عَلَيْهِ النَّاسُ
நவ்வாஸிப்னு ஸம்ஆன் அன்ஸாரி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்
நான் நபி (ஸல்) அவர்களிடம் நன்மை தீமையைப் பற்றிக் கேட்டேன் நன்மை என்பது நற்குணத்தின் பெயராகும்
எது உமது உள்ளத்தை உறுத்துகிறதோ மேலும் உம் செயல்களில் எதை மக்கள் அறிவதை நீர் வெறுப்பீரோ அது தான் தீமையாகும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்
நூல் முஸ்லிம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment