இழிகுணம்
இழிகுணம்
[]=[]=[]=[]=[]=[]
J . யாஸீன் இம்தாதி
••••••••••
Bismillahir Rahmanir Raheem
********
பிற மனிதனின் இயல்பான தவறுகளை பெரிதுபடுத்தி அதன் மூலம் இனிமை காணும் தன்மையை தன்னுள் வளர்த்தி கொண்டவன்
அவன் செய்யும் காரியம் அவனது நன்மைகளை அழித்து மறுமையில் நஷ்டவாளியாக மாற்றிவிடும் என்பதை உணர மாட்டான்
இறைவனின் அன்பை பெறுவதற்கு அதிகாலை சுபுஹ் தொழுகையில் கலந்து கொண்டு சலாம் கொடுத்த உடன் திக்ருகளில் ஈடுபடும் முன் பின்வரிசையில் திரும்பி பார்த்து யாரெல்லாம் தொழுகைக்கு வரவில்லையோ அவர்களை நோட்டம் எடுத்து அப்போதே அவன் செய்த நன்மையான காரியத்தை நாசமாக்கி விட்டு வீடு திரும்புவான்
குலதொழில் போல் இதே குணாதிசயத்தை அவனது சந்ததிகளும் இவனை பார்த்தே கற்று கொள்வர்
அதனால் தான் பெற்றோர்கள் புறம் பேசுவதில் புகழ் பெற்றவர்களாக இருந்தால் அதே குணம் அவர்களை சார்ந்தோரிடமும் பரவலாக காண முடிகிறது
தவறை சுட்டி காட்டுதல் என்பது வேறு பிறர் தவறை சுட்டி காட்டுவதையே தனது முழு நேர வேலையாக கருதுவது என்பது வேறு
குறிப்பாக பொருளாதாரத்தில் தன்னிலை பெற்றவர்கள் குடும்ப பாரத்தை சுமக்காதவர்கள் பக்குவம் பெறாதவர்கள் பிறர் நலம் நாடாதவர்கள் இந்த சாத்தானின் இழி குணத்திற்கு அடிமைபட்டு இருப்பதை பரவலாக காண முடிகிறது
عَنْ اَبِيْ بَرْزَةَ اْلاَسْلَمِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ اْلاِيْمَانُ قَلْبَهُ: لاَ تَغْتَابُوا الْمُسْلِمِيْنَ وَلاَ تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ، فَاِنَّهُ مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ يَتَّبِعِ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِيْ بَيْتِهِ
நாவால் மட்டும் முஸ்லிமானவர்களே!
உள்ளங்களில் ஈமான் நுழையாத மக்களே
நீங்கள் முஸ்லிம்களை புறம் பேசாதீர்கள்!
அவர்களுடைய குறைகளைத் தேடித் திரியாதீர்கள்
ஏனேனில், எவர் அவர்களுடைய குறைகளைத் தேடித்திரிகிறாரோ அல்லாஹுதஆலா அவருடைய குறைகளை பின் தொடர்கிறான் அல்லாஹுதஆலா எவருடைய குறைகளைப் பின்தொடர ஆரம்பித்து விடுவானோ அவனை வீட்டில் இருக்க வைத்தே கேவலப்படுத்துவான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் அபூதாவூத்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment