ஈமானை பாதுகாப்போம்
ஈமானை தற்காப்போம்
[]=[]=[]=[]=[]=[]
J . யாஸீன் இம்தாதி
••••••••••
Bismillahir Rahmanir Raheem
********
கட்டுரை எண் 1420
*********
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பது உண்மை
அதனால் இஸ்லாம் கூறும் செய்திகள் அனைத்தும் அறிவுக்கு ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது இஸ்லாமிய அடிப்படை ( ஈமானிய ) கோட்பாடுகளுக்கு எதிரானது
இஸ்லாம் அறிவு ஏற்று கொள்ளும் விதத்திலும் செய்திகளை சொல்லியுள்ளது மனிதனின் அறிவுக்கும் அறிவியலுக்கும் புலப்படாத பல செய்திகளையும் சொல்லியுள்ளது என்பதே எதார்த்தம்
அறிவுக்கும் மட்டுமே முக்கியதுவம் தரும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் இறைவன் வேதத்தையும் தூதுவத்தையும் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை
காரணம் எக்காலத்திலும் அறிவாளிகள் இருக்கவே செய்வார்கள்
இஸ்லாம் அறிவுக்கு எற்காத விசயங்களில் கண்டனத்தை தெரிவித்திருந்தால் அவைகளை விளக்கி சொல்வதற்கு அறிவை பயன் படுத்தலாமே தவிர இஸ்லாம் கூறும் ஆதாரப்பூர்வமான செய்திகளை மறுப்பதற்கு அறிவை பயன்படுத்த கூடாது
அதற்கு பெயர் தான் நாத்தீகம்
நாத்தீகத்திற்கும் ஈமானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
முஸ்லிம் அல்லாத ஒருவர் இஸ்லாத்தை ஏற்று கொள்வதற்காக இஸ்லாத்தில் இல்லாத சிறப்புகளை இட்டுகட்டி சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை
இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஈமான் தொடர்பான செய்திகளை முஸ்லிம் அல்லாதவர்கள் மறுப்பதால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்று இஸ்லாத்தை வலைக்க வேண்டிய அவசியமும் இல்லை
நேர்வழி வழங்குதல் என்பது இறைவனின் தனிப்பட்ட அதிகாரம்
அந்த அதிகாரத்தை நம் கைவசம் இருப்பதாக கற்பனையில் சாத்தான் ஏற்படுத்தியுள்ள விபரீதமே இதற்கு மூல காரணம்
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் துணை இல்லை என்றால் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இடையில் கூட நம் அறிவை கொண்டு முரண்பாடுகளை கற்பிக்க இயலும் குழப்பங்களை எளிதாக உருவாக்க இயலும்
சத்தியத்தை புரிந்து வந்த கொள்கை சகோதரர்கள் இவ்விசயத்தில் மிகவும் கவனம் பேண வேண்டும்
وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ
மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்
(அல்குர்ஆன் : 24:48)
اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான் இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்
(அல்குர்ஆன் : 24:51)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment