குர்பானி
குர்பானியும்
முஸ்லிம் சமூகமும்
[]=[]=[]=[]=[]=[]
J . யாஸீன் இம்தாதி
••••••••••
بسم الله الرحمن الرحيم
•••••••••
கட்டுரை எண் 1418
*********
நெடுங்காலமாக குர்பானி கொடுத்து வரும் முஸ்லிம்களில் பலருக்கும்
குர்பானி என்றால் என்ன ?
அகீகா என்றால் என்ன ?
குர்பானிக்கும் அகீகாவுக்கும் என்ன வேறுபாடு ? குர்பானிக்கும் அகீகாவுக்கும் ஒரே சட்டங்களா ? என்ற எந்த விபரங்களும் தெரிவது இல்லை
ஒரு கால்நடையை தனியாக தரும் பொருளியல் வலிமை பெற்றவர்களும் கூட்டு குர்பானியில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டால் அதன் மூலம் சமூகத்தில் தன்னை குர்பானி கொடுத்தவராக காட்டி கொள்ள இயலூமே தவிர இறைவனின் முழு திருப்தி இவ்வாறு கொடுப்பதின் மூலம் அடைந்து விட முடியும் என்று கற்பனையில் கருதுகிறார்
தொழில் கடன்கள் இதர கடன்களை காரணம் காட்டி குர்பானி கொடுப்பதில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்வது முஸ்லிம்களின் பண்பாக இருக்க இயலுமா ?
ஒருவர் கொடுக்கும் குர்பானி அவரை சார்ந்த குடும்பத்திற்கு போதுமானது என்றால்
கூட்டு குடும்பமாக ஒரே இல்லத்தில் வாழும் அனைவருக்கும் ஒருவர் தரும் குர்பானியே போதுமானதா ?
என்பதும் பலர்களின் அறியாமையில் தான் உள்ளது
மார்க்க ரீதியான செய்திகள் அனைத்தையும் செவி வழியாக கேள்வி பதில்களாக கேட்கும் குறுகிய சிந்தனை இருக்கும் வரை இஸ்லாமிய அடிப்படை செய்திகளை கூட முழுமையாக அறிந்து கொள்ள இயலாது
இல்லங்களில் வாங்கி வைத்துள்ள குர்ஆன் ஹதீஸ் செய்திகளை சுயமாகவும் சில மணிநேரம் படிப்பதற்கு அன்றாடம் முயற்சி செய்யவும்
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا
உம் இறைவன் மேல் சத்தியமாக அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்
(அல்குர்ஆன் : 4:65)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment