துல்ஹஜ் சிறப்பு
ரமலானும் துல்ஹஜ்ஜும்
[]=[]=[]=[]=[]=[]
J . யாஸீன் இம்தாதி
••••••••••
19-07-2021
******
ரமலான் மாதமும் சிறந்தது
துல்ஹஜ் மாதமும் சிறந்தது
ரமலானின் இறுதி பத்து நாட்களும் மிகவும் சிறந்தது
துல்ஹஜ் மாதத்தின் துவக்க பத்து நாட்களும் அதே போல் மிகவும் சிறந்தது
துல்ஹஜ் பிறை (9) அரஃபா நோன்பு நோற்பது வலியுருத்தப்பட்ட சுன்னத் மாற்று கருத்து இல்லை
ஆனால் ஹஜ்ஜுப்பெருநாள் வரும் முன் உள்ள அனைத்து நாட்களிலும் நோன்புகளை நோற்பது துல்ஹஜ் மாதத்தில் அதிகமான நன்மைகளை பெற்று தரும் பாக்கியங்களில் ஒன்றாகும்
எனவே துல்ஹஜ் மாதத்தின் முந்தைய பத்து நாட்களிலும் (இபாதத்) திக்ருகளை அதிகப்படுத்துங்கள்
திக்ருகளில்
தக்பீர்
தஸ்பீஹ்
தஹ்மீத் மிகவும் சிறப்பானது
ஆடு மாடுகளை குர்பானி கொடுப்பது துல்ஹஜ் மாதத்தின் வழிபாடுகளில் ஒன்று
ஆனால் அதுவே முதல் வழிபாடும் மூல வழிபாடும் அல்ல
ஆடு மாடுகளை குர்பானி கொடுக்காதவன் மறுமையில் குற்றவாளியாக மாட்டான்
ஆனால் மனதில் இருக்கும் சிர்க் என்ற இணை வைத்தல் கள்ளம் கபடம் வஞ்சகம் துரோகம் அநீதம் ஒழுங்கீனம் போன்றவைகளை குர்பானி கொடுக்காது மரணித்து விட்டால் அதுவே நாம் குற்றவாளியாக தண்டனை பெற போதுமானது
---*******---
முந்தைய பத்து நாட்களில் செய்யும் அமல்கள் ஜிஹாது செய்யும் நன்மையை விட மேலானது என்ற கருத்தில் ஹதீஸ்களும் இடம் பெற்றுள்ளது
وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: (كنت عند رسول الله صلى الله عليه وسلم قال: فذكرت له الأعمال فقال: ما من أيام العمل فيهن أفضل من هذه العشرـ قالوا: يا رسول الله، الجهاد في سبيل الله؟ فأكبره. فقال: ولا الجهاد إلا أن يخرج رجل بنفسه وماله في سبيل الله، ثم تكون مهجة نفسه فيه) [رواه أحمد وحسن إسناده الألباني]
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment