நேர்பார்வையும் குருட்டு பார்வையும்

நேர் பார்வையும்
      குருட்டு பார்வையும்

             []=[]=[]=[]=[]=[]=[]
       J . யாஸீன் இம்தாதி
                  ••••••••••
                 بسم الله الرحمن الرحيم
                   •••••••••
       கட்டுரை எண் 1417
                ~~~~~~~~~~
சிந்தனையாளர்களின் உரையை செவிமடுப்பது தான் சிந்தனையின் வளர்சி என்று எப்போது ஒரு மனிதன் முடிவு செய்து விடுகிறானோ அப்போதே அவன் தனது சிந்தனை ஆற்றலை சிதைக்க துவங்கி விடுகிறான் 

நேர்மையான வியாபாரி என்று பெயர் எடுத்த காரணத்தால் அவன் விற்பனை செய்யும் பொருள்கள் யாவும் தரம் வாய்ந்தது என்று எவரும் உரசி பார்க்காது முடிவு
செய்வது இல்லை 

கைராசி மருத்துவர் என்று பெயர் எடுத்து இருப்பதால் அனைத்து நோய்களுக்கும் அதே மருத்துவரை எவரும் அணுகுவது இல்லை 

இது போன்ற விடயங்களில் சுய சிந்தனையை பயன் பயன் படுத்தி சரியான முடிவை எடுப்பவர்கள் ஆன்மீகத்தின் பெயரால் பிரபலம் அடைந்த அறிஞர்கள் குருமார்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்து அவர்கள் எதை சொன்னாலும் சரி காணும் தன்மையை பலரிடம் காணுகிறோம் 

முஸ்லிம்களும் குறிப்பாக ஏகத்துவம் பேசும் கொள்கைவாதிகளும் இதில் விதி விலக்கு இல்லை என்றே கருத தோணுகிறது 

பிறர்கள் கூற்றை செவிமடுத்து அதில் உள்ள கருத்துக்களை இயன்ற வரை எடை போட்டு பார்ப்பது தான் நேர்பார்வை 

நம்பிக்கை பெற்ற மனிதர் கூறும் செய்திகளை அவரது நேர்மையை மாத்திரம் ஆதாரமாக கொண்டு ஏற்று கொள்வது தான் குருட்டு பார்வை  


இந்த அம்சத்தில் இருந்து விடுபடும் வரை மறுமை வெற்றியை எதிர்பார்ப்பது கானல் நீர் போன்றதே 



اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா ?

     (அல்குர்ஆன் : 47:24)


       நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்